ETV Bharat / state

ஆபாச படங்களைக் காண்பித்து 6 வயது சிறுவனுக்கு பாலியல் துன்புறுத்தல்.. அரசு ஊழியர் போக்சோவில் கைது! - pocso case - POCSO CASE

காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஆபாச படங்களைக் காண்பித்து 6 வயது சிறுவனுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த அரசு ஊழியர் போக்சோ மற்றும் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

காஞ்சிபுரம் தாலுகா காவல்நிலையம்
காஞ்சிபுரம் தாலுகா காவல்நிலையம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 2, 2024, 3:51 PM IST

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவர் அரசு ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் திருமணமாகி மனைவியைப் பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில், அதே மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணும் தனது கணவரை பிரிந்து தனியாக வசிந்து வந்துள்ளார். இந்த பெண்ணுக்கு ஆறு வயதில் ஒரு ஆண் குழந்தையும், 10 வயதில் பெண் குழந்தையும் உள்ளது.

இந்நிலையில், அப்பெண் தனது தாய் நடத்தும் டிபன் கடையில் உதவியாக இருந்துள்ளார். இந்நிலையில் ராஜேஷ் அவ்வப்போது, இந்த டிபன் கடைக்குச் சென்று டிபன் சாப்பிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் ராஜேஷுக்கும், அப்பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இந்த பழக்கம் நட்பாக மாறியுள்ளது.

செல்போன் மூலம் தங்களுடைய நட்பை இருவரும் வளர்த்து வந்துள்ளனர். நட்பு காலப்போக்கில் திருமணத்திற்கு மீறிய உறவாக மாறி உள்ளது. தொடர்ந்து, ராஜேஷ் வேலை பார்க்கும் துறையில் தற்காலிக வேலை குறித்த அறிவிப்பு வந்தபோது, தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி ராஜேஷ் அப்பெண்ணுக்கு அதே துறையில் தற்காலிக வேலையும் வாங்கிக் கொடுத்துள்ளார்.

இதையும் படிங்க : மதுரையில் நட்சத்திர விடுதிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்! - மதுரையில் வெடிகுண்டு மிரட்டல்

அதுமட்டுமின்றி, ராஜேஷ் அவ்வப்போது அப்பெண்ணின் வீட்டிற்குச் சென்று வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், ராஜேஷ் நேற்று முன்தினம் பெண்ணின் மகனிடம் தகாத முறையில் நடந்துள்ளார். தொடர்ந்து, அவ்வப்போது அப்பெண் வீட்டில் இல்லாத போது, இதுபோன்று அந்த சிறுவனிடம் ராஜேஷ் தகாத முறையில் நடந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், சம்பவத்தன்று சிறுவனிடம் தகாத முறையில் நடந்து சிறுவனை தாக்கியுள்ளார். சிறுவனை தாக்கி விட்டு அங்கிருந்து, ராஜேஷ் தப்பிச் சென்றுள்ளார். குழந்தைக்கு உடல்நிலை தான் சரியில்லை என நினைத்த அப்பெண் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது குழந்தை தாக்கப்பட்டுள்ளது தெரியவந்தது.

இது தொடர்பாக காஞ்சிபுரம் தாலுகா காவல்நிலையத்தில் புகார் அளித்தன் பேரில், போலீசார் விசாரணையைத் தொடங்கினர். அப்போது அப்பெண்மணியின், பெண் குழந்தையிடம் விசாரித்த போது, அவ்வப்போது ஆபாசப் படங்களை சிறுவன் மற்றும் சிறுமி ஆகிய இருவருக்கும் ராஜேஷ் காண்பித்து உணர்ச்சிகளைத் தூண்டும் வகையில் நடந்துள்ளதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. சிகிச்சை பெற்று வந்த 10 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக கொலை வழக்கு மற்றும் போச்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு ராஜேஷ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.