ETV Bharat / state

6 சிறுமிகளுக்கு பாலியல் சீண்டல் அளித்த அரசு பள்ளி தலைமை ஆசிரியருக்கு இரட்டை ஆயுள் தண்டனை..! - POCSO act

Sivaganga POCSO Case: சிவகங்கை அருகே 6 பள்ளி சிறுமிகளுக்கு பாலியல் சீண்டல் அளித்த அரசு பள்ளி தலைமை ஆசிரியருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Sivaganga POCSO Case
Sivaganga POCSO Case
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 23, 2024, 7:42 AM IST

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் செயல்பட்டு வந்த ஒரு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்தவர், முருகன் (54). இவர் கடந்த 2014ஆம் ஆண்டு, பள்ளியில் பயின்று வந்த 6 சிறுமிகளுக்கு பாலியல் சீண்டல் அளித்தாகப் பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவரின் பாட்டி சிவகங்கை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

அந்த புகாரின் அடிப்படையில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டார். மேலும், இந்த வழக்கு சிவகங்கை மாவட்டம் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கு நேற்று (திங்கட்கிழமை) நீதிபதி சரத்ராஜ் முன்பு விசாரணை வந்தது.

அப்போது, ஆறு சிறுமிகளுக்கு பாலியல் சீண்டல் அளித்த அரசு பள்ளி தலைமை ஆசிரியர் முருகன் என்பவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், 47 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும், ரூ.69 ஆயிரம் அபராதமாக விதித்து தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு தமிழக அரசு சார்பில் ரூ.29 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டார்.

புகார் அளிக்க: தங்களுக்கு இதுபோன்ற பாலியல் தொந்தரவுகள் நடக்கும்பொழுது பாதிக்கப்பட்ட மாணவர்கள், மாணவிகள் 14417- என்ற உதவி எண்ணுக்கு அழைத்து குறைகளைப் பதிவு செய்ய மறவாதீர்கள். மேலும், இத்தகைய சூழலை உரிய முறையில் பெற்றோரின் மேற்பார்வையில் அணுகுவதே அவைகளுக்குத் தீர்வாகும்

இதையும் படிங்க: தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து என்ஜினியர் பலி! பதைபதைக்கும் சிசிடிவி காட்சி வெளியீடு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.