ETV Bharat / state

விவசாய நிலத்தில் கவிழ்ந்த அரசுப் பேருந்து விபத்து... அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்! - VANIYAMBADI GOVT BUS ACCIDENT

வாணியம்பாடி அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து 30 அடி விவசாய நிலத்தில் கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விபத்துக்குள்ளான அரசு பேருந்து
விபத்துக்குள்ளான அரசு பேருந்து (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 17, 2025, 3:42 PM IST

திருப்பத்தூர்: சென்னையிலிருந்து திருப்பத்தூருக்கு பயணிகளை ஏற்றி வந்த அரசு பேருந்து, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள 30 அடி விவசாய நிலத்திற்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளாயுள்ளது. இந்த விபத்தில், அதிர்ஷ்டவசமாக பேருந்தில் பயணம் செய்த பயணிகள் உயிர் தப்பியுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஜோலார்பேட்டை போலீசார், இவ்விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், சென்னையில் இருந்து திருப்பத்தூருக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பேருந்து ஒன்று இன்று (ஜனவரி 17) வெள்ளிக்கிழமை புறப்பட்டுள்ளது.

இந்த பேருந்து, திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த சின்னமோட்டூர் பகுதியில் வந்துக்கொண்டிருந்தபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள 30 அடி விவசாய நிலத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாயுள்ளது. இந்த விபத்தில், அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் 10 பேர் காயமடைந்துள்ளனர்.

விபத்துக்குள்ளான அரசு பேருந்து
விபத்துக்குள்ளான அரசு பேருந்து (ETV Bharat Tamil Nadu)

இதையும் படிங்க: பிரிட்டன் மருத்துவமனையில் இந்திய செவிலியருக்கு கத்திக்குத்து! நடந்தது என்ன?

இதனையடுத்து, அப்பகுதி மக்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஜோலார்பேட்டை போலீசார், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்ந்து, விவசாய நிலத்தில் இருந்து அரசு பேருந்தை மீட்கும் பணியில் ஈடுப்பட்டு தற்போது பாதுகாப்பாக பேருந்தை மீட்டுள்ளனர். 30 அடி விவசாய நிலத்தில் பேருந்து கவிந்த நிலையில், பேருந்தில் பயணம் செய்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.