ETV Bharat / state

தேனியில் 9-ம் வகுப்பு மாணவருக்கு பாலியல் தொல்லை அளித்த விடுதி காப்பாளர் கைது! - Theni School boy sexual assault

Theni Sexual assault: தேனி மாவட்டத்தில் 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவருக்கு பாலியல் தொல்லை அளித்த அரசு விடுதி காப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 22, 2024, 7:43 PM IST

தேனி: தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவன், அரசு மேல்நிலைபள்ளி ஒன்றில் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவருடைய கிராமத்திற்கு போதிய பேருந்து வசதி இல்லை என கூறப்படுகிறது. எனவே, பள்ளி இருக்கும் கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறை விடுதியில் தங்கி படித்து வருகிறார்.

இந்த நிலையில், 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு அந்த விடுதியின் காப்பாளர் அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அந்த மாணவன் தனது தந்தையிடம் கூறியுள்ளார். இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து மயிலாடும்பாறை காவல் நிலையத்தில் அவரது தந்தை புகார் அளித்துள்ளார்.

அந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணையைத் துவங்கினர். அதில், ஒன்பதாம் வகுப்பு மாணவனுக்கு விடுதிக் காப்பாளர் பாலியல் தொந்தரவு கொடுத்தது உறுதியானது. தொடர்ந்து, விடுதி காப்பாளரை காவல்துறையினர் நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றனர்.

அப்போது அவருக்கு உயர் ரத்த அழுத்தக் கோளாறு ஏற்பட்டதால், உடனடியாக அவர் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர், உடல் நலம் தேறியதும் காவல்துறையினரால் கைது செய்து சிறையில் அடைக்கப்படுவார் என காவல்துறையினர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: “தவறுகளை பள்ளி நிர்வாகம் மூடி மறைக்காதீர்கள்..” அன்பில் மகேஷ் வலியுறுத்தல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.