ETV Bharat / state

கூகுள் மேப் மூலம் செல்போன் திருடனை பிடித்த இளைஞர்! இணையத்தில் பகிர்ந்த ருசிகர தகவல்! - googlemaphelpstofindstolencellphone

Man Finds his father's stolen phone with help of Google Maps: தனது தந்தையிடம் இருந்து திருடப்பட்ட செல்போனை கூகுள் மேப் உதவியுடன் மீட்டது தொடர்பாக எக்ஸ் பக்கத்தில் இளைஞர் வெளியிட்ட பதிவு வைரலாக பரவி வருகிறது.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 5, 2024, 8:57 PM IST

Updated : Feb 6, 2024, 4:34 PM IST

ஐதராபாத் : கூகுளின் மிக சிறந்த மென்பொருள் கூகுள் மேப் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. கூகுள் மேப்பின் வருகையால், புதிய இடங்களுக்கு இடையிடையே வழிக்கேட்டு செல்வது மக்களிடையே மிகவும் குறைந்துள்ளது. மேலும், கூகுள் மேப்பினால் தொலைதூர பயணங்களை மேற்கொள்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

அத்துடன், நிறைய பேர் தைரியமாக தனியாகவே பயணங்களை மேற்கொள்ளவும் உதவியாக உள்ளது. இந்நிலையில் நாகர்கோவிலை சேர்ந்த இளைஞர் ரயிலில் இருந்து திருடப்பட்ட தனது தந்தையின் பை மற்றும் தொலைபேசியை கூகுள் மேப் மூலம் கண்டுபிடித்தது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு இருப்பது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில் அவர், "எனது தந்தை நாகர்கோவிலில் இருந்து திருச்சிக்கு நாகர்கோவில் - கச்சிகுடா விரைவு ரயிலில் (Nagercoil - Kacheguda express) ஸ்லீப்பர் வகுப்பில் சென்று கொண்டிருந்தார். அவர் நாகர்கோவிலில் இருந்து அதிகாலை 1:43 மணிக்கு ரயில் ஏறினார். ரயில் காலியாக இருந்துள்ளது. அப்போது என் அப்பாவுடன் ஏறிய மற்றொரு நபர் எனது அப்பாவின் பை மற்றும் மொபைல் போனை திருடி, திருநெல்வேலி சந்திப்பில் ரயிலில் இறங்கி உள்ளார்.

அதை உணர்ந்த என் அப்பா, ரயிலில் தேடிப் பார்த்துவிட்டு, தனது நண்பரின் தொலைபேசியில் இருந்து அதிகாலை 3:51 மணிக்கு அவரது போன் திருடப்பட்டதைத் தெரிவித்தார். அதிர்ஷ்டவசமாக, அவரின் மொபைலில் இருப்பிடப் பகிர்வு (Location sharing) ஆன் ஆக இருந்தது. அது எனக்கு பகிர்வும் செய்யப்பட்டு இருந்தது. அதன் படி, அதாவது மொபைலின் இருப்பிடத்தை என்னால் கண்காணிக்க முடியும். அதைச் சோதித்தபோது, ​​திருநெல்வேலி மேலப்பாளையம் அருகே தண்டவாளத்தில் மொபைல் இருந்தது.

அதன் மூலம் திருடன் வேறு ரயிலில் நாகர்கோவிலுக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறான் என்பதை கண்டறிந்தேன். இதை மீட்டெடுக்க உதவுவதற்காக எனது நெருங்கிய நண்பரான உள்ளூர் திமுக பிரமுகர் பாபினை அழைத்தேன். மேலும் திருடனை பிடிக்க இருவரும் நாகர்கோவில் ரயில் நிலையம் சென்றோம். ரயில்வே காவல் துறையினர் ஒருவர் எங்களுடன் வந்தார்.

கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் (Kanniyakumari express) ரயிலில் திருடன் வந்தான், ரயிலில் கூட்டம் அதிகமாக இருந்தது, என்னிடம் இருந்த ஒரே அறிகுறி என் அப்பாவின் தொலைபேசியும் அவரது கருப்பு பையும் தான். ரயில் நிலையத்தில் எங்களால் திருடனை பிடிக்க முடியவில்லை. ஆனால் என்னால் இன்னும் அவரைக் கண்காணிக்க முடிந்தது.

அவரது அசைவுகளின் அடிப்படையில், அவர் பிரதான வாயில் வழியாக வெளியேறி நாகர்கோவில் ரயில் நிலையத்தை அண்ணா பேருந்து நிலையம் மற்றும் வடசேரி கிறிஸ்டோபர் பேருந்து நிலையத்துடன் இணைக்கும் உள்ளூர் பேருந்தில் சென்றதைக் கண்டுபிடித்தேன். தொடர்ந்து இருவரும் இரு சக்கர வாகனத்தில் அவரை விரட்டிச் சென்றோம்.

2 முதல் 3 நிமிடங்களுக்குப் பிறகு, கூகுள் மேப்ஸ் உதவியுடன் அவரை 2 மீட்டர் தொலைவில் கண்டறிந்தேன். தொழிற்சங்க உறுப்பினரான எனது அப்பாவின் பையில் சிஐடியு மற்றும் அதன் சின்னம் பொறிக்கப்பட்டு இருந்ததை கண்டறிந்தேன். நானும் எனது நண்பரும் பஸ் ஸ்டாண்டில் திருடனை பிடித்து பஸ் ஸ்டாண்டில் இருந்த மற்றவர்களின் உதவியுடன் பொருட்களை மீட்டோம்.

அவனிடம் இருந்த அனைத்தையும் மீட்டுவிட்டோம் என்று நினைத்த போது உள்ளூர் காவல் துறையினர் வந்து விசாரித்ததில் மேலும் பலரின் பொருட்களை அந்த நபர் திருடி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த நபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர் என்று அந்த நபர் பதிவிட்டு இருந்தார். தற்போது இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : சண்டிகர் மேயர் தேர்தல்: "ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் செயல்.. ஜனநாயக படுகொலையை ஒருபோதும் அனுமதியோம்" - உச்ச நீதிமன்றம்!

Last Updated : Feb 6, 2024, 4:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.