ETV Bharat / state

திருப்பத்தூரில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து.. எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிறுத்தம்! - கட்டேரி

Goods Train Derail in Tirupathur: திருப்பத்தூர் கட்டேரி பகுதியில் சரக்கு ரயிலின் சக்கரம் தடம் புரண்டு விபத்துக்குள்ளான நிலையில், ஈரோடு மார்க்கமாகச் செல்லும் ரயில்கள் ஒரு மணி நேரத்திற்கு மேலாக ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளது.

திருப்பத்தூரில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 1, 2024, 7:36 PM IST

திருப்பத்தூர்: சென்னையை நோக்கி சரக்கு ரயில், ஈரோடு மார்க்கமாக இன்று சென்று கொண்டிருந்த நிலையில், திருப்பத்தூர் கட்டேரி பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, திடீரென சரக்கு ரயிலின் 17வது பெட்டியின் சக்கரங்கள் பயங்கர சத்தத்துடன் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

இது தொடர்பாக ரயில்வே துறையினருக்கு கிடைத்த தகவலின் பேரில், ரயில்வே துறை ஊழியர்கள் உடனடியாக விரைந்து வந்து தடம் புரண்ட சக்கரங்களை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக, ஈரோடு மார்க்கமாக செல்லும் தன்பாத், ஹலபி ரயில்கள் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

இதனால் ரயில் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். மேலும், இந்த விபத்தில் எந்த ஒரு அசம்பாவிதம் நடைபெறவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: ராமேஸ்வரம் கஃபே யாருடையது? அப்துல் கலாமுக்கு உள்ள தொடர்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.