சென்னை: சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து, இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் வந்தது. இதில் வந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்தனர்.
அப்போது, பெண் பயணிகள் உட்பட 30 பேரை, ஒரு மாதத்திற்குள், பலமுறை இலங்கைக்கு சென்று வந்தவர்களை நிறுத்தி வைத்து விசாரணை நடத்தினர். அதோடு சுங்க அதிகாரிகள் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்தனர்.
அதில் முறையாக வரி செலுத்தாமல் லேப்டாப், ஐ போன்கள், எலக்ட்ரானிக் சிகரெட், விலை உயர்ந்த மது பாட்டில்கள் கொண்டு வரப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து சுங்க அதிகாரிகள் 30 பேர் கொண்டு வந்த பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க: சென்னை விமான நிலையில் ரூ.1.5 கோடி மதிப்புடைய கடத்தல் தங்கம் பறிமுதல்.. ஒப்பந்த ஊழியர்கள் 2 பேர் கைது!
மேலும், விமானத்தில் இருந்து பயணிகள் வந்து இறங்கிய பகுதிகள் அனைத்தையும் ஆய்வு செய்த போது, மது பாட்டில்களின் கவர், ஐ போன்களின் கவர் போன்றவை விமான நிலைய கழிவறையில் போடப்பட்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் அவர்கள் மீது ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்