ETV Bharat / state

ஆசிரியை வீட்டில் 80 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. வாணியம்பாடி அருகே பரபரப்பு! - Aalangayam theft - AALANGAYAM THEFT

Aalangayam theft: வாணியம்பாடி அருகே ஆசிரியை ஒருவரின் வீட்டில் 80 சவரன் நகைகள் மற்றும் ரூ.4.43 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொள்ளை சம்பவம் நடைபெற்ற வீட்டில் போலீசார் ஆய்வு
கொள்ளை சம்பவம் நடைபெற்ற வீட்டில் போலீசார் ஆய்வு (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 10, 2024, 9:16 AM IST

திருப்பத்தூர்: வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் பெத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி வெங்கடேசன். இவரது மனைவி பத்மாவதி (55). இவர் ஆலங்காயம் அடுத்த காவலூர் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், கடந்த ஜூன் 6ஆம் தேதி தன் மகளை கல்லூரியில் சேர்ப்பதற்காக குடும்பத்துடன் நாமக்கல் சென்று, பின்னர் அங்கிருந்து கன்னியாகுமாரிக்கு சுற்றுலா சென்றுவிட்டு, நேற்று பிற்பகல் வீடு திரும்பியுள்ளனர். அப்போது வீட்டிற்கு உள்ளே சென்று பார்த்த போது, வீட்டின் பின்புறக் கதவு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பத்மாவதி, அறையின் உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த 80 சவரன் தங்க நகைகள், 4 லட்சத்து 73 ஆயிரம் ரொக்கப் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளை அடித்துச் சென்றிருப்பது தெரிய வந்துள்ளது.

இது குறித்து பத்மாவதி ஆலங்காயம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து, புகாரின் பேரில் ஆலங்காயம் போலீசார், கொள்ளைச் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இக்கொள்ளைச் சம்பவம் நடைபெற்ற வீட்டில் வாணியம்பாடி துணை காவல் கண்காணிப்பாளர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

இதையும் படிங்க: படிக்கட்டு அருகே நின்று கொண்டிருந்த பெண்.. நொடிப்பொழுதில் தவறி விழுந்த பதற வைக்கும் காட்சிகள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.