ETV Bharat / state

வெளிநாட்டில் வேலை செய்பவர் வீட்டில் 100 சவரன் நகைகள் கொள்ளை..சென்னை அருகே பரபரப்பு! - Theft in Chennai - THEFT IN CHENNAI

Gold and money theft in Chennai: சென்னை திருவேற்காடு அருகே வெளிநாட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்தவரின் வீட்டில் 100 சவரன் நகைகள், 50 ஆயிரம் ரூபாய் பணம் உள்ளிட்டவற்றை மர்ம கும்பல் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொள்ளையடிக்கப்பட்ட வீடு
கொள்ளையடிக்கப்பட்ட வீடு (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 29, 2024, 4:23 PM IST

சென்னை: திருவேற்காடு அடுத்த அயனம்பாக்கம் ஈஜிபி நகரை சேர்ந்தவர் ஜனார்த்தனன் (45). இவர் வெளிநாட்டில் தனியார் கட்டுமான நிறுவனத்தில் எஞ்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி கோகிலா (40), இவர்களுக்கு பவதாரணி என்ற ஒரு மகள் உள்ளார்.

இந்த நிலையில், கடந்த மாதம்தான் ஜனார்த்தனன் வெளிநாட்டில் இருந்து சென்னை திரும்பியுள்ளார். இந்நிலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை குடும்பத்துடன் சென்னை அண்ணா நகரில் உள்ள ஒரு ஷாப்பிங் மாலுக்கு சென்றதாகக் கூறப்படுகிறது.

பின்னர் இரவு வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்துள்ளது. தொடர்ந்து உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த 100 சவரன் நகை, 50 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளை அடிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஜனார்த்தனன், இதுகுறித்து திருவேற்காடு போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு வந்த திருவேற்காடு போலீசார் கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், தடயவியல் நிபுணர்களை வரவழைத்து அங்கு பதிவாகி இருந்த ரேகை உள்ளிட்ட தடயங்களை சேகரித்தனர்.

மேலும், இந்த கொள்ளை சம்பவம் குறித்து திருவேற்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: வாட்டர் டேங்க் மீது பெண் தோழியுடன் வீடியோ கால்.. தவறி விழுந்த சிறுவன் பலி.. சென்னையில் நடந்தது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.