"ஒரே நாடு ஒரே தேர்தல் நல்ல நோக்கம்" - ஜி.கே.மணி பேச்சு! - ONE NATION ONE ELECTION
ஒரே நாடு ஒரே தேர்தல் கொள்கை நல்ல நோக்கம் கொண்டது. ஆனால், இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது உள்ள சிக்கல்களை ஆராய்ந்து கலைய வேண்டும் என பாமக கௌரவ தலைவர் ஜி.கே.மணி கூறியுள்ளார்.
Published : Dec 16, 2024, 10:49 PM IST
|Updated : Dec 16, 2024, 10:59 PM IST
ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை மாவட்டம், முத்துக்கடையில் உள்ள தனியார் விடுதியில் ராணிப்பேட்டை ஒருங்கிணைந்த மாவட்ட பாமக சார்பில் வருகிற டிசம்பர் 21ம் தேதி பாமக நடத்த உள்ள தமிழ்நாடு உழவர் பேரியக்கத்தின் மாநில மாநாடு குறித்து ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பாமக கௌரவ தலைவர் ஜி.கே.மணி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “ஒரே நாடு ஒரே தேர்தல் கொள்கையானது நாடு முழுவதும் ஒரே தேர்தல் நடத்தும் முறையாகும். இந்த கொள்கை நல்ல நோக்கம் கொண்டுள்ளது. ஆனால், இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது உள்ள சிக்கல்களை ஆராய்ந்து கலைய வேண்டும்.
மழை, வெயில் போன்ற எந்த பருவ காலம் என்றாலும் விவசாயிகள் நட்டத்தை சந்திக்க வேண்டிய சூழல் உள்ளது. விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு ஒரு சொட்டு மழை நீரைக் கூட வீணாகாத வகையில் மெகா திட்டம் ஒன்றை தீட்டி, தடுப்பணைகளை கட்டுவதன் மூலம் அரசு பாசன புரட்சியையும், நீர்வளப் புரட்சியையும் செய்ய வேண்டும்.
16.12.2024 இன்று வேலூர் மாவட்ட பொதுக்குழு கூட்டம் அண்ணாமலையார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் வருகின்ற 21-12-24 அன்று நடைபெற உள்ள தமிழ்நாடு உழவர் பேரியக்க மாநில மாநாடு குறித்து பேசப்பட்டது... pic.twitter.com/p1iBp1laQg
— G.K.Mani (@PmkGkm) December 16, 2024
தென் மாவட்டங்களில் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய கோதாவரி - காவிரி இணைப்பு திட்டத்தை, மத்திய அரசு ஆந்திர மாநிலத்துடன் பேச்சு வார்த்தை நடத்தி செயல்படுத்த வேண்டும். இதன் மூலம் கடலில் கலக்கும் 2000 டி.எம்.சி. தண்ணீரை சேமிக்க முடியும் என்று கூறினார்.
இதையும் படிங்க: அடேங்கப்பா! மதுரை மல்லி விலை கிலோ இவ்வளவா? பூக்களின் விலை நிலவரம் என்ன?
தமிழகத்தில் கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளது. இதனால், மனித ஒழுக்கம் சீர்கெட்டு உள்ளது. சாலை விபத்துக்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. ஒரு நாளைக்கு 7,440 விபத்துக்கள் ஏற்படுகிறது. அதுவே ஆண்டு ஒன்றுக்கு 73,000 பேர் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளனர். இதனை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவதில் பெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நிவாரண நிதியாக ரூ.6000 வழங்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.2000 மட்டுமே வழங்கப்படுகிறது. குறிப்பாக, வட மாவட்டத்தை சேர்ந்த மகளிர் பெரும்பாலான நபர்களுக்கு வெள்ள நிவாரண நிதி முறையாக செல்லவில்லை. தமிழக அரசு இந்த பாகுபாடுகளை கலைந்து அனைவருக்கும் நிவாரண நிதி வழங்க வேண்டும்" என தெரிவித்தார்.