ETV Bharat / state

"அண்ணாமலை கோவை தொகுதியில் வெற்றி பெறப் போவதில்லை; மீண்டும் கர்நாடகாவுக்குச் செல்ல இருக்கிறார்" - நடிகை காயத்ரி ரகுராம்! - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Gayathri Raghuram Lok Sabha Election Campaign: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கோவை தொகுதியில் வெற்றி பெறப் போவதில்லை மீண்டும் அவர் கர்நாடகாவுக்குச் செல்ல இருக்கிறார் என காயத்ரி ரகுராம் தேர்தல் பிரச்சாரத்தின் போது விமர்சித்துள்ளார்.

Gayathri Raghuram Lok Sabha Election Campaign

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 7, 2024, 9:04 PM IST

Updated : Apr 8, 2024, 10:53 AM IST

Gayathri Raghuram Lok Sabha Election Campaign

கரூர்: கரூர் மாவட்டம், பசுபதி பாளையம் கடைவீதியில் இன்று(ஏப்.6) அதிமுக சார்பில் கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் எல்.தங்கவேலுவை ஆதரித்து, அக்கட்சியின் மகளிரணி துணை செயலாளர் காயத்ரி ரகுராம் பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்த பிரச்சாரத்தில் பேசிய அவர், "பாஜகவும், திமுகவும் தமிழக மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் எம்பி ஆக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜோதி மணி கரூர் மக்களுக்காக நாடாளுமன்றத்தில் எதுவும் பேசவில்லை. தற்பொழுது மீண்டும் கரூர் தொகுதியில் போட்டியிடுவதால் கண்ணீர் வடிக்கிறார். அடுத்த ஐந்தாண்டுகள் அவர் வீட்டுக்குள்ளே இருப்பது தான் நல்லது.

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பாஜக தலைவர் கரூரில் போட்டியிட்டால் வெற்றிபெற மாட்டோம் எனத் தெரிந்து கோயம்புத்தூரில் போட்டியிடுகிறார். தகரப் பெட்டியுடன் கோவை சென்றதாகக் கூறும், ஆட்டுக்குட்டி அண்ணாமலை, கோவை தொகுதியிலும் வெற்றி பெறப் போவதில்லை, மீண்டும் அவர் கர்நாடகாவுக்குச் செல்ல இருக்கிறார். அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் பெண்களுக்காகக் கொண்டுவரப்பட்ட திட்டங்களை திமுக அரசு நிறுத்திவிட்டு வெறும் 30 சதவீத பெண்களுக்கு மட்டுமே மகளிர் உரிமைத் தொகை வழங்கி ஏமாற்றி வருகின்றனர்.

தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்வோம் என்று கூறி ஆட்சிக்கு வந்த திமுக அரசு இதுவரை ஏன் நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. மாணவர்களையும், மக்களையும் ஏமாற்றி வருகிறது. ஏமாற்றாமல் ஆட்சி நடத்தியவர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே.

பெண்களுக்குத் தாலிக்குத் தங்கம், அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு 7.5 இட ஒதுக்கீடு, ஒரே ஆண்டில் பதினோரு அரசு மருத்துவக் கல்லூரிகளைத் தமிழகத்திற்குக் கொண்டு வந்தது உள்ளிட்ட சாதனைகளை அதிமுக அரசு செய்துள்ளது.

தமிழகத்தில் போதை கலாச்சாரம் அதிகரித்து வருவதால், இளைஞர்கள் போதைப் பொருளுக்கு அடிமையாகி வருகின்றனர். இதனால் எதிர்காலத்தில் பெண்கள் மீதான குற்றங்கள் அதிகரிக்கும், திமுக நிர்வாகிகள் போதைப் பொருளை வெளிநாட்டிலிருந்து கடத்தி வந்தது தெரியவந்து அவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். தமிழகத்தில் மூன்று மடங்கு வரி உயர்வு உயர்த்தப்பட்டுள்ளது. தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டம் நிறுத்தப்பட்டது மகளிர் காணத் திருமண உதவித்தொகை நிறுத்தப்பட்டது அனைத்தும் திமுக ஆட்சியில் தான்.

இதுகுறித்து கரூர் தொகுதி வேட்பாளர் ஜோதி மணி திமுக அரசிடம் கேள்வி கேட்க முடியுமா? அதிமுக உறுப்பினர் இருந்தால் தான் இதுகுறித்து சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் கேள்வி கேட்க முடியும். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் பாடுபடும் ஒரே கட்சி அதிமுக மட்டும் தான்.

கரூர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளருக்கு நீங்கள் வாக்களித்தால் நாடாளுமன்றத்தில் தமிழகத்தின் உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பார்" என்று பேசினார்.

இதையும் படிங்க: மதுரவாயலில் கஞ்சா விற்பனை.. 2 கல்லூரி மாணவர்கள் உள்பட 3 பேர் கைது! - College Students Selling Ganja

Last Updated : Apr 8, 2024, 10:53 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.