ETV Bharat / state

'கொலை மிரட்டல் வருது'.. கானா பாடகி இசைவாணி சென்னை கமிஷனரிடம் பரபரப்பு புகார்..! - GANA SINGER ISAIVANI

ஐயப்பன் பாடல் சர்ச்சையான நிலையில், தனக்கு கொலை மிரட்டல் வருவதாக கானா பாடகி இசைவாணி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

கானா பாடகி இசைவாணி புகார்
கானா பாடகி இசைவாணி புகார் (credit - therealisaivani insta page and ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 23, 2024, 6:23 PM IST

சென்னை: மண்ணடி பகுதியை சேர்ந்தவர் பிரபல கானா பாடகி இசைவாணி. இவர் பல்வேறு இசை நிகழ்ச்சிகளில் கானா பாடல்களை பாடி வருகிறார். மேலும், தனியார் தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார். இந்த நிலையில், கடந்த 2019 ஆண்டு மயிலாப்பூரில் ''I am sorry ayyappa'' என்ற பாடலை பாடினார். மேலும் இந்த பாடலை பல்வேறு நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பாடி வந்துள்ளார்.

இந்த பாடல் அண்மையில் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் செய்யப்பட்டதை தொடர்ந்து சர்ச்சையுமாகி எதிர்மறையான விமர்சனங்களையும் பெற்றது. இந்த நிலையில், சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் கானா பாடகி இசைவாணி புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதில், அவர் கானா பாடல்களும், சமூக விழிப்புணர்வு பாடல்களும் தான் பாடிவருவதாக கூறியுள்ளார். இதேபோல் கடந்த 2019 ஆம் ஆண்டு 'I am sorry ayyappa' பாடல்களை பாடியதாகவும், சமூக வலைதளங்களில் அந்த பாடல் பரவி வரும் நிலையில், கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு எண்களிலிருந்து தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: மருத்துவரிடம் பிழைத்து வண்டலூர் பூங்காவில் இறந்த குரங்கு குட்டி... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டை கேட்கும் கோர்ட்!

மேலும், தன்னை அருவருக்கத்தக்க வகையில் பேசுவதும், தன்னுடைய புகைப்படத்தை மார்ஃபிங்க் செய்து சமூக வலைதளங்களில் சமூக விரோதிகள் பரப்பி வருவதாகவும் கூறியிருக்கிறார்.

அத்துடன், பாடல் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு பாடப்பட்டு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது வேண்டுமென்றே சமூகத்தில் பதட்டம் ஏற்படுத்தவும், பொது அமைதிக்கும் பங்கம் ஏற்படுத்தவும் திட்டமிட்டு சிலர் செயல்பட்டு வருவதாக புகாரில் கூறியுள்ளார். மேலும், இதனால் தான் கடும் மன உளைச்சலுக்கு ஆளானது மட்டுமல்லாமல், சமூக விரோதிகளால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்ற அச்சத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

எனவே, தொடர்ந்து தொலைபேசி அழைப்புகள் மூலம் கொலை மிரட்டல் விடுத்து வருபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, தனது உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு அளிக்கும்படி கேட்டுக்கொண்டு, மிரட்டல் வந்த எண்களை குறிப்பிட்டு காவல் ஆணையர் அலுவலகத்தில் கானா பாடகி இசைவாணி புகார் அளித்துள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.