ETV Bharat / state

"ஜி பே' ஸ்கேன் பண்ணுங்க ஸ்கேம் பாருங்க" - பிரதமர் மோடி படத்துடன் கூடிய போஸ்டர் வைரல்! - G PAY MODI SCAM POSTER

vellore G pay modi poster: வேலூரில் பிரதமர் மோடி புகைப்படத்துடன் "ஜி PAY ஸ்கேன் பண்ணுங்க ஸ்கேம் பாருங்க” என்ற வாசகங்களுடன் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

ஜி பே ஸ்கேன் பண்ணுங் ஸ்கேம் பாருங்க
ஜி பே ஸ்கேன் பண்ணுங் ஸ்கேம் பாருங்க
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 12, 2024, 2:30 PM IST

வேலூர் பிரதமர் மோடி

வேலூர்: தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வருகிற 19ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் வாக்குப்பதிவு நாள் நெருங்கி வரும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் அனல் பறக்கத் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேபோன்று அரசியல் கட்சிகள் தேர்தலுக்கான விளம்பர பணிகளையும் தீவிரப்படுத்தியுள்ளது. வாக்கு சேகரிக்கும் வகையில், வாக்குறுதிகளை அச்சிட்டு துண்டுப் பிரசுரங்களாக பொதுமக்களிடம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், ஒவ்வொரு கட்சியினரும், தங்களது கட்சியின் விளம்பர பிரச்சார பாடல்கள் மூலமாகவும் வாக்கு சேகரித்து வருகின்றனர். பல்வேறு பகுதிகளில் எதிர்க்கட்சியை குறிவைத்து போஸ்டர்களும் ஒட்டப்பட்டது.

அந்த வகையில் தற்போது, வேலூர் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் பிரதமர் மோடி புகைப்படத்துடன், ஜி PAY ஸ்கேன் பண்ணுங்க ஸ்கேம் பாருங்க என்ற வாசகங்களுடன், கியூ ஆர் கோட்(QR) போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அந்த போஸ்டர்களில் மோடி உருவத்துடன் இருக்கும் QR கோடை ஸ்கேன் செய்தால், பாஜகவின் ஊழல்கள் என ஒரு வாய்ஸ் ஓவர் உடன் கூடிய வீடியோ ஓடத் தொடங்குகிறது. அதில், பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரச்சாரத்தில் மக்களுக்கு வாக்குறுதிகளை கொடுத்து நிறைவேற்றாததை ஒலிபெருக்கியின் மூலம் ஒளிபரப்பாகிறது.

அந்த வீடியோவில்,"கருப்பு பணத்தை மீட்டு ஏழை எளிய மக்களின் வங்கிக் கணக்கில் ரூ.15 லட்சம் கொடுப்பதாக சொன்னார்கள். ஆனால் அது என்னாச்சு? பாஜக செய்யும் வசூல் தான் அதிகமாகி உள்ளது. 2019 முதல் தேர்தல் பத்திரங்கள் மூலமாக 1,300 நிறுவனங்கள் மற்றும் தனியார் நபர்களிடமிருந்து 6 ஆயிரம் கோடியை நூதன முறையில் பாஜக வசூல் செய்துள்ளது.

சிஏஜி அறிக்கையின் மூலம் பாஜகவின் 7.5 கோடி ஊழல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சுங்கச்சாவடியில் விதிமுறைகளை மீறி பயணிகளிடம் 132 கோடி வசூல் செய்திருக்கின்றனர்” என பல குற்றச்சாட்டுகளை ஒலிபெருக்கின் மூலம் ஒளிபரப்பாகி வருகிறது.

வேலூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் சுவர்களில் மோடி புகைப்படத்துடன் ஸ்கேன் பண்ணுங்க ஸ்கேம் பாருங்க என அடையாளம் தெரியாத நபர்களால் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. பலரும், இந்த போஸ்டர்களை ஸ்கேன் செய்து, பிரச்சார விளம்பரத்தை கேட்டு வருகின்றனர்.

இதில், அந்த போஸ்டரை ஸ்கேன் செய்த அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறுகையில், “பிரதமர் மோடியின் 10 வருட ஆட்சியின் அவல நிலை இந்த போஸ்டரில் தெரிகிறது. இரண்டு முறை ஆட்சியில் இருந்த மோடி இந்திய மக்களுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் எதுவும் செய்யவில்லை. அவரது ஆட்சியில் அரசு நிறுவனங்களை தனியாரிடம் ஒப்படைத்தது தான் அதிகம்.

மூன்றாவது முறையாக பிரதமர் மோடி ஆட்சி அமைத்தால் இந்தியாவின் அவல நிலை நீடிக்கும். பெரும் முதலாளிகளுக்கான கைக்கூலியாக செயல்பட்டு வருகிறார் பிரதமர் மோடி. கருப்பு சட்டங்களை கொண்டு சிறுபான்மை மக்களை நசுக்க பார்க்கிறார். மக்களுக்கு எந்த நலத்திட்டங்களையும் வழங்கவில்லை. அவர் அளித்த வாக்குறுதிகளையும் நிரைவேற்றவில்லை. எனவே, வேலூர் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்திற்கு வாக்களித்து இந்தியாவை காப்பாற்ற வேண்டும்.” என்றனர்.

இதையும் படிங்க: தேர்தல் விதிமுறையை மீறி அண்ணாமலை பிரச்சாரம்? திமுக - பாஜகவினர் மோதல்.. கோவையில் களேபரம் - நடந்தது என்ன? - Lok Sabha Election 2024

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.