ETV Bharat / state

ரூ.1 லட்சம் லஞ்சம் பெற்ற தனிப்படை போலீசார்.. 4 பேர் பணியிடை நீக்கம்! - Trichy Police Bribery - TRICHY POLICE BRIBERY

Trichy Police officials Suspended for Bribery: திருச்சியில் ஏர் கன் வைத்து பறவைகளை வேட்டையாடிய மூவரின் குற்றத்தை மறைக்க ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய 4 தனிப்படை போலீசாரை திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் தற்காலிக பணியிடை நீக்கம் செய்துள்ளார்.

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட தனிப்படை போலீசார் லியோனி ரஞ்சித்குமார், ஷாகுல் ஹமீது, வீரபாண்டி, மணிகண்டன்
பணியிடை நீக்கம் செய்யப்பட்ட தனிப்படை போலீசார் லியோனி ரஞ்சித்குமார், ஷாகுல் ஹமீது, வீரபாண்டி, மணிகண்டன் (Credits- ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 17, 2024, 3:48 PM IST

திருச்சி: திருச்சி மாவட்டத்தில் சட்ட விரோத செயல்கள் மற்றும் குற்றச் சம்பவங்களில் ஈடுபடுபவர்களை கண்காணிக்க உட்கோட்ட அளவில் தனிப்படைகள் செயல்பட்டு வருகிறது. அதன்படி, திருச்சி மாவட்டம் மணப்பாறை புத்தாநத்தம் உட்கோட்டத்திற்கு உதவி ஆய்வாளார் லியோனி ரஞ்சித்குமார் தலைமையில், வீரபாண்டி, ஷாகுல் ஹமீது மற்றும் மணிகண்டன் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கபட்டு இருந்தது.

இந்த தனிப்படையினர் கடந்த மே 9ஆம் தேதி அன்று வளநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சின்னகோனார்பட்டியில் சிறப்பு தணிக்கையில் ஈடுபட்டபோது, அங்கு சட்டவிரோதமாக ஏர் கன் ஒன்றினை வைத்துக்கொண்டு பறவைகளை வேட்டையாடிக் கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்டம், கல்லி அடைக்கம்பட்டியைச் சேர்ந்த சதாசிவம், ராமசாமி, மலைக்குடிப்பட்டியைச் சேர்ந்த நாகராஜ் ஆகியோர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

மேலும், அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யாமல் இருப்பதற்காக ஒரு லட்சம் ரூபாய் பணம் கேட்டுள்ளனர். மேலும், பணத்தினை வளநாடு கைகாட்டியில் உள்ள ஏரிக்கரைக்கு அருகில் அன்றைய தினமே சதாசிவம் என்பவரின் உறவினர் விஜயகுமார் மூலம் தனிப்படையினர் பணம் பெற்றுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உதவி எண்ணிற்கு (9487464651‌) தகவல் கிடைத்ததன் பெயரில், இச்சம்பவம் குறித்து விசாரணை செய்ய திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், இது சம்பந்தமாக மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட நிர்வாகம் விசாரணை மேற்கொண்டு குற்றச்சாட்டை உறுதிசெய்ததன் அடிப்படையில், சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது 3 பிரிவின் கீழ் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மேலும், உதவி ஆய்வாளர் லியோனி ரஞ்சித்குமார் உட்பட நான்கு காவலர்களையும் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், இது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடும் காவல்துறையினர் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: தஞ்சாவூரில் லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலர் அதிரடி கைது.. பொறியில் சிக்கியது எப்படி?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.