தஞ்சாவூர் : கும்பகோணம் மாநகர் மாதுளம்பேட்டை பகுதியில் உள்ள நாதன் நகரில் சரஸ்வதி (66), மூத்த மகன் சங்கரலிங்கம் (35) அவரது மனைவி பிரமிளா (29), இளைய மகன் ராஜ்குமார் (29) ஆகிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரும் வசித்து வருகின்றனர்.
குடும்ப தேவைக்காக கந்துவட்டிக்கு, கமலக்கண்ணன் என்பவரிடம் ரூ.4.5 லட்சமும், நாச்சியார்கோயிலைச் சேர்ந்த கோபி என்பவரிடம் ரூ.1.5 லட்சமும், அரக்கோணத்தைச் சேர்ந்த ஆனந்த் என்பவரிடம் ரூ.1.66 லட்சமும் வெவ்வேறு காலகட்டங்களில் கடனாக பெற்றதாக தெரிகிறது.
இதில், ஏற்கனவே பேசிய தொகையை விட கடன்காரர்கள் கூடுதல் வட்டி தொகை கேட்டு குடும்பத்தினரை நெருக்கடி கொடுத்து அவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதாக தெரிகிறது. இதில், மனமுடைந்த சரஸ்வதி, சங்கரலிங்கம், பிரமிளா மற்றும் ராஜ்குமார் ஆகிய நால்வரும் தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்துள்ளனர்.
இதையும் படிங்க : திருவள்ளூர் சுகாதார பணி அலுவலகத்தில் தீ விபத்து; லட்சங்கள் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்!
இதனைப்பார்த்த அக்கம்பக்கத்தினர், உடனடியாக 108 ஆம்புலன்ஸை வரவழைத்து நால்வரை மீட்டு கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து கும்பகோணம் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கந்துவட்டி பிரச்சனையில், ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.