ETV Bharat / state

தீபாவளிக்கு புத்தாடை வாங்கிவிட்டு வீடு திரும்பிய தந்தை, மகள் விபத்தில் பலி.. திருவாரூர் அருகே சோகம்! - TIRUVARUR ACCIDENT

திருவாரூர் மாவட்டத்தில் இருவேறு இடங்களில் நிகழ்ந்த சாலை விபத்தில், தந்தை, மகள் உட்பட நான்கு பேர் உயிரிழந்தனர்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credits- ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 28, 2024, 7:12 PM IST

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் வடபாதிமங்கலம் அருகே உள்ள பெரியகொத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன் (48). இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். தீபாவளி பண்டிகைக்காக சீனிவாசன் பெரியகொத்தூர் கிராமத்திற்கு வந்துள்ளார்.

இந்த நிலையில் பெரிய கொத்தூரிலிருந்து திருவாரூருக்கு சென்று, புத்தாடை மற்றும் பட்டாசுகள் வாங்கிக் கொண்டு சீனிவாசன், மனைவி உமா (40), மூத்த மகள் இளவரசி (16), இளைய மகள் சாரா (12) ஆகிய நான்கு பேரும் ஒரே ஸ்கூட்டி மோட்டார் பைக்கில் வீடு திரும்பி உள்ளனர்.

அப்போது ஊட்டியாணி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது, கூத்தாநல்லூரில் இருந்து மாவூர் நோக்கி சென்ற தனியார் பள்ளி வேன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில், நிகழ்விடத்திலேயே சீனிவாசனும், இளைய மகள் சாராவும் உயிரிழந்தனர். மனைவி உமா மற்றும் இளவரசி ஆகியோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வடபாதிமங்கலம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: தவெக தொண்டர்கள் இருவர் பலி..! சென்னையில் இருந்து மாநாட்டிற்கு செல்லும் வழியில் நேர்ந்த சோகம்..!

அதேபோல், புனவாசல் கிராமத்தை சேர்ந்த மாரிமுத்து(வயது 55) மற்றும் மாவூர் வடக்குத் தெருவைச் சேர்ந்த ராஜராஜன்(வயது 47) ஆகியோர், மன்னார்குடி அருகே வேலையை முடித்துவிட்டு சொந்த ஊருக்கு திரும்பினர். இருசக்கர வாகனம் ஐவர் சமாதி பகுதியில் சென்றபோது சரக்கு லாரி - இருசக்கர வாகனம் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்ட விபத்தில் இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து தொடர்பாக மன்னார்குடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரது உடல்களை மீட்டு உடற்கூராய்வுக்காக திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.