சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய நடைமேடையில் பயணிகள் நான்கு பேர் திடீரென மயங்கி விழுந்தனர். இதனைப் பார்த்த சக பயணிகள் உடனடியாக அவர்களை மீட்டு ரயில்வே நிலையத்தில் உள்ள அவசர நிலை மருத்துவமனையில் முதலுதவி செய்து மேல் சிகிச்சைக்காக சென்ட்ரல் ரயில்வே நிலையத்திற்கு எதிரே உள்ள ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவர்களை மருத்துவர்கள் சோதனை செய்ததில் அவர்கள் சரியாக உணவு உண்ணாததால் மயங்கி விழுந்தது தெரிய வந்தது. பின்னர் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதையடுத்து அவர்கள் யார் என்ற விவரம் குறித்து ரயில்வே போலீசார் விசாரணை செய்தனர். அந்த விசாரணையில், மயங்கி விழுந்த நான்கு பேரும் மேற்கு வங்கத்தை சேர்ந்த சமர் கான்(35) மாணிக் கோரி(50) சத்யா பாண்டிட் (33) ஆசித் பான்டிட்(35) ஆகியோர் என்பது தெரியவந்தது.
இதையும் படிங்க : "பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டத்தை முதல்வர் செயல்படுத்த காரணம் இதுதான்"- சபாநாயர் அப்பாவு! - Appavu breakfast scheme
மேலும், அவர்கள் சென்னை வந்த விவரம் குறித்து விசாரணை செய்தபோது, நான்கு பேரும் கடந்த ஆறு நாட்களுக்கு முன்பு திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் விவசாய வேலைக்காக வந்ததாகவும், 3 நாட்கள் தங்கி இருந்த நிலையில், அங்கு வேலை இல்லாத காரணத்தினால் மீண்டும் சொந்த ஊர் செல்வதற்காக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்து தங்கியதும் தெரிய வந்தது.