ETV Bharat / state

வாக்கு எண்ணிக்கைக்கு தயாராகும் கோவை, பொள்ளாச்சி தொகுதிகள்! - Lok Sabha Election Result 2024 - LOK SABHA ELECTION RESULT 2024

Coimbatore and Pollachi Counting Centre 4 Layer Security: கோவை, பொள்ளாச்சி மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தில் நான்கடுக்கு பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள நிலையில், வாக்கு எண்ணும் மையத்தைச் சுற்றி 100 மீட்டருக்கு பொதுமக்கள் செல்ல காவல்துறை தடை விதித்துள்ளது.

கோவை, பொள்ளாச்சி வாக்கு எண்ணும் மையக் கூட்டம்
கோவை, பொள்ளாச்சி வாக்கு எண்ணும் மையக் கூட்டம் (Photo Credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 3, 2024, 4:32 PM IST

Updated : Jun 3, 2024, 4:58 PM IST

கோயம்புத்தூர்: நாடு முழுவதும் 2024 நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்தது. தமிழகத்தில் முதல் கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி நடைபெற்று முடிந்தது. கோவை நாடாளுமன்றத் தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெற்றது முடிந்ததைத் தொடர்ந்து அனைத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் தடாகம் சாலையில் உள்ள அரசினர் தொழில்நுட்பக் கல்லூரியில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டன.

இந்நிலையில் நாளை நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாடு முழுவதும் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அதற்காக பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதன்படி கோவை அரசினர் தொழில்நுட்பக் கல்லூரியில் போலீசார் தீவிர பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையத்திலிருந்து 100 மீட்டர்க்கு எந்த ஒரு கட்சியினரும் பொதுமக்களும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பதால் தடுப்புகள் அமைப்பதற்கு பேரிகேட் ஆகியவையும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

கோவை மக்களவை தொகுதிக்கு 123 வாக்கு எண்ணிக்கை கண்காணிப்பாளர்களும் 123 வாக்கு எண்ணிக்கை உதவியாளர்களும் 127 நுண் பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் கோவை மக்களவைத் தொகுதிக்கு வாக்கு எண்ணிக்கை பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் 2500க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

அதே சமயம் கோவை மாநகராட்சி கலையரங்கத்தில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கான இறுதி நாள் பயிற்சியும் அளிக்கப்பட்டது. இங்கு வந்த மாவட்ட ஆட்சியர் / தேர்தல் நடத்தும் அலுவலர் கிராந்திகுமார், மற்றும் தேர்தல் ஆணைய உயர் அதிகாரிகள் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதையும் அறிவுறுத்தினர்.

பொள்ளாச்சி: பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் உள்ள பொள்ளாச்சி, தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு, உடுமலை, மடத்துக்குளம், வால்பாறை சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெற்ற வாக்குப்பதிவு இயந்திரங்கள் பொள்ளாச்சி தனியார் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணிக்கை பணிகள் நாளை (ஜூன் 4) நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பார்வையாளர்களாக தேர்தல் ஆணையத்தால் அனுராக் சவுத்ரி மற்றும் நிதீஷ் குமார் தாஸ் எனும் இரண்டு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். நாளை நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கையில், முதலில் காலை 8 மணிக்கு தபால் வாக்கு எண்ணும் பணிகளும், அதைத் தொடர்ந்து 8.30 மணிக்கு மேல் வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகளும் நடைபெற உள்ளன. இதற்காக வாக்கு எண்ணும் மையங்களில் நான்கு அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணும் மையத்தில் மத்திய பாதுகாப்புப் படையினர், தமிழக காவல் துறையினர், தேர்தல் அலுவலர்கள் என மொத்தம் 105 அலுவலர்கள் சுழற்சி முறையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் டாக்டர் மகாலிங்கம் பொறியியல் தொழில்நுட்ப கல்லூரியைச் சுற்றி 100 மீட்டர் சுற்றளவிற்கு பொதுமக்கள் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணிக்கை முகவர்களுக்கு வாக்கு எண்ணிக்கை மைய வளாகத்தில் போதுமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை முகவர்களுக்கும், தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கும் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. மேலும், வாக்கு எண்ணும் மையத்தில் போதிய அத்தியாவசிய வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை பணிகளைக் கண்காணிக்கும் வகையில் 360 டிகிரியில் கேமராக்களும், சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட்டு உள்ளன. பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் மொத்தம் 15 லட்சத்து 97,467 வாக்காளர்களில், 11 லட்சத்து 24 ஆயிரத்து 743 பேர் வாக்களித்தனர். வாக்குகளை எண்ணுவதற்கு மொத்தம் 84 வாக்கு எண்ணிக்கை மேசைகளும், தபால் வாக்கு எண்ணிக்கைக்காக 7 மேசைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மொத்தம் 23 சுற்றுக்களாக நடைபெறும் வாக்கு எண்ணிக்கை பணியில் 102 வாக்கு எண்ணிக்கை கண்காணிப்பாளர்கள் 102 உதவியாளர்கள், 115 நுண் பார்வையாளர்கள் என மொத்தம் 319 அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: கோவை: உடல்நலம் தேறிய பெண் யானை 4 நாட்களுக்கு பிறகு வனப்பகுதியில் விடுவிப்பு! - FEMALE ELEPHANT IN COVAI

Last Updated : Jun 3, 2024, 4:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.