ETV Bharat / state

ஆரணி அருகே ஏரியில் மூழ்கி 4 குழந்தைகள் உயிரிழப்பு! - Children drowned lake in Arani

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 18, 2024, 7:13 AM IST

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே ஏரியில் மூழ்கி 4 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஆரணி பெயர்ப்பலகை
ஆரணி பெயர்ப்பலகை (Credits - ETV Bharat Tamil Nadu)

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே அடையபலம் ஊராட்சிக்கு உபட்ட அண்ணாநகரைச் சேர்ந்தவர்கள் விநாயகம் - செல்வி தம்பதி. இவர்களுக்கு தனுஷ்கா (5) மற்றும் கார்த்திகா (10) என்ற 2 மகள்கள் இருந்தனர். இதில் கார்த்திகா 3ஆம் வகுப்பு படித்து வந்தார்.

அதேநேரம், அதே கிராமத்தைச் சேர்ந்தவர்கள் குப்பன் - அஞ்சலி தம்பதியி. இந்த தம்பதிக்கு மோகன் (12) என்ற மகனும், வர்ஷா (8) என்ற மகளும் இருந்தனர். இதில் மோகன் 7ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், நேற்று விடுமுறை நாள் என்பதால், தனுஷ்கா, கார்த்திகா, மோகன் மற்றும் வர்ஷா ஆகியோர் ஒன்றாக ஓடந்தாங்கல் கிராமத்தில் உள்ள ஏரிக்கு குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: நண்பனின் இல்ல நிகழ்வுக்கு சென்ற இடத்தில் சோகம்.. நெல்லை தாமிரபரணி கால்வாயில் மூழ்கி 3 மாணவர்கள் உயிரிழப்பு!

இந்த நிலையில், ஏரி அருகே இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடச் சென்றுள்ளனர். அப்போது, ஏரிக்கரை மீது துணிகள் இருந்ததைப் பார்த்துள்ளனர். ஆனால், ஏரியில் யாரும் இல்லாததால் ஏரியில் இறங்கி யாராவது இருக்கிறார்களா என தேடியுள்ளனர். அப்போது, 4 குழந்தைகளும் சடலமாக இருப்பதை பார்த்து மேலே கொண்டு வந்துள்ளனர்.

பின்னர், இது குறித்து குழந்தைகளின் பெற்றோர் மற்றும் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். இதனையடுத்து, தகவலறிந்து வந்த ஆரணி தாலுகா போலீசார், 4 பேரின் சடலத்தைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த ஆரணி தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.