ETV Bharat / state

சென்னையில் காதல் திருமணம் செய்த இளைஞர் ஆணவப்படுகொலை; பெண்ணின் சகோதரர் உட்பட 4 பேர் கைது! - love issue murder in chennai

Pallikaranai Honour Killing: பள்ளிக்கரணையில் காதல் திருமணம் செய்த இளைஞர் ஆணவப்படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பெண்ணின் சகோதரர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

four arrested in chennai pallikaranai youth honour killing case
சென்னையில் இளைஞர் ஆணவப்படுகொலை
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 25, 2024, 10:26 AM IST

சென்னை: பள்ளிக்கரணையை சேர்ந்த பிரவீன் (26) என்பவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ஜல்லடம்பேட்டையைச் சேர்ந்த ஷர்மி என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். 4 மாதங்களுக்கு முன்பு ஷர்மியை பெண் வீட்டாருடைய சம்மதம் இன்றி பிரவீன் அழைத்துச் சென்று திருமணம் செய்து கொண்டனர்.

பிரவீன் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால், பெண் வீட்டார் பிரவீன் மீது கோபமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று (பிப்.24) இரவு பெண்ணின் சகோதரர் தினேஷ் மற்றும் மூன்று நபர்கள், பிரவீனை பள்ளிக்கரணையில் உள்ள டாஸ்மாக் கடையின் அருகே கத்தியால் தலை மற்றும் முகத்தில் வெட்டி விட்டு தப்பிச் சென்று விட்டனர்.

இதனையடுத்து அங்கிருந்தவர்கள் பிரவீனை படுகாயங்களுடன் மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பிரவீன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறை தனிப்படை அமைத்து கொலை செய்த நபர்களைத் தேடி வந்தனர். இந்நிலையில் இன்று காலை பிரவீனை கொலை செய்த வழக்கில் அவரது மனைவியின் சகோதரர் தினேஷ் உள்ளிட்ட 4 பேரை கைது செய்துள்ளனர்.

இதையும் படிங்க: போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யாததால் குற்றவாளிக்கு ஜாமீன் வழங்கி சென்னை ஐகோர்ட் உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.