ETV Bharat / state

கமல்ஹாசனை டார்கெட் செய்யும் அதிமுக, பாஜக.. தஞ்சை கூட்டத்தில் வைகைச் செல்வன் கூறியது என்ன? - LOK SABHA ELECTION 2024

Vaigai Selvan: சங்பரிவார் அமைப்புகள் மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகள் இந்த மண்ணில் தலை தூக்கி விட்டால் மதவெறி தலை தூக்கி விடும் என அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் தெரிவித்துள்ளார்.

vaigai selvan
வைகைச் செல்வன்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 9, 2024, 1:51 PM IST

வைகைச் செல்வன் தேர்தல் பிரச்சாரம்

தஞ்சாவூர்: நாடாளுமன்ற தேர்த்தலுக்கான வாக்குப்பதிவு தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்.19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனையடுத்து அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர்.

அந்த வகையில் தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பாக போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் சிவநேசனுக்கு, வாக்கு கேட்டு அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் நேற்று (ஏப் 08) தஞ்சையில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது,"பாஜகவிற்கு மறந்தும் நீங்கள் வாக்களித்து விடக்கூடாது, சங்பரிவார் அமைப்புகள் மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகள் இந்த மண்ணில் தலை தூக்கி விட்டால் மதவெறி தலை தூக்கி விடும். மேலும் சிறுபான்மை மக்கள் நசுக்கப்படுவார்கள், தீவிரவாதம் அதிகமாக வளர்ந்து விடும் என்றார். பாஜக ஒற்றை ஆளாக இருக்கின்ற கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ளது.

டிடிவி தினகரனுடைய கட்சி, அது கட்சியே அல்ல கம்பெனி கூடாரம். அந்தக்கட்சியின் அதிபர் டிடிவி தினகரன் சொல்கிறார், "இந்தியாவிலேயே 10 ஆண்டு கால பாஜக ஆட்சி ஊழல் இல்லாத ஆட்சி" என்று, ஊழல் குற்றம் சாட்டப்பட்டு சிறைக்கு சென்று வந்தவர் பாஜக ஆட்சிக்கு சர்டிபிகேட் தருகிறார் என்று எண்ணுகிற போது சிரிப்பாக இருக்கிறது.

ஓய்வெடுக்க வேண்டிய காலகட்டத்தில் ராமநாதபுரத்தில் பலாப்பழத்தைச் சுமந்து கொண்டு தட்டுத் தடுமாறி வாக்கு சேகரித்து வருகிறார் ஓபிஎஸ். எங்கெல்லாம் அநீதி ஏற்படுகிறதோ..அங்கு விஸ்வரூபம் எடுப்பேன் என்கிறார், நீங்கள் விஸ்வரூபம் எடுத்தாலும் சரி பாபநாசம் படம் எடுத்தாலும் சரி உங்கள் படம் இனிமேல் ஓடாது. விஸ்வரூபம், பாபநாசம் படம் எடுத்த கமல்ஹாசன், டார்ச் லைட்டில் பேட்டரி இல்லாமல், அண்ணா அறிவாலயத்தில் கொத்தடிமையாக கிடக்கிறார்.

ஓபிஎஸ் கதை அவ்வளவுதான், நீங்கள் வேண்டுமானால் ஓஏபி பென்ஷனுக்கு முயற்சி செய்யலாமே? தவிர இனி உங்களுக்கு எதிர்காலம் கிடைக்காது. பிரதமர் மோடி தமிழகத்திற்கு வருகிறார், மோடியின் உத்தரவாதம் என்று ஹிந்தியில் பேசுகிறார், பத்தாண்டு காலம் நாட்டை ஆள்வதற்கு தந்தார்கள், அதுவே சரி இல்லை, மீண்டும் ஐந்தாண்டு காலம் என்ன உத்தரவாதம் வேண்டும், என்று கேள்வி எழுப்பி தமிழ்நாட்டில் பாஜக பருப்பு வேகாது என்று ஹிந்தியில் கூறினார்.

போதைப்பொருள் தமிழ்நாடு முழுவதும் தங்கு தடை இன்றி கிடைக்கிறது. போதைப் பொருள் விற்ற பணத்தை முதலமைச்சரின் குடும்பம் பயன்படுத்தியிருக்கிறது" என்றும் குற்றம் சாட்டினார். இப்பிரச்சாரத்தில் அதிமுக நிர்வாகிகள் காந்தி, திருஞானம், சரவணன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: திருப்பூரில் காரும், அரசு பேருந்தும் மோதி கோர விபத்து: 3 மாத குழந்தை உட்பட 5 பேர் பலி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.