ETV Bharat / state

"தூத்துக்குடியில் கனிமொழியை எதிர்த்து அதிமுக தான் களம் கண்டு வெற்றி பெறும்" - கடம்பூர் ராஜூ நம்பிக்கை - Kanimozhi Karunanidhi

Thoothukudi Constituency: தூத்துக்குடியில் கனிமொழியை எதிர்த்து அதிமுக தான் களம் காண்டு வெற்றி பெரும் என முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

Former Minister Kadambur Raju Press Meet
முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர் சந்திப்பு
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 18, 2024, 10:51 PM IST

Updated : Feb 19, 2024, 3:58 PM IST

முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர் சந்திப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி, கிருஷ்ணா நகரில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள அன்னதானம் மையம் திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில், முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்து மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதன் பின்னர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசுகையில், "திமுக தேர்தல் வாக்குறுதிகளை 95% நிறைவேற்றவில்லை என்று சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பேசியுள்ளார். எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா வழியில் திமுகவை எதிர்ப்பதே எங்களுடைய இலக்கு என்றும் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.

அதிமுகவிற்குப் பதிலடி கொடுக்க ஒரு இயக்கம் தமிழகத்தில் இதுவரை தோன்றவில்லை. நேற்று பெய்த மழையில் முளைத்த காளான் நடிகர் கமல்ஹாசனின் கட்சி. திமுகவுடன் கூட்டணி சேருவதற்காக ஒரு இடத்தில் அதிமுக பற்றிப் பேசி உள்ளார். அவருடைய கருத்தைப் பெரிதாக எடுத்துக்கொள்ள அவசியமில்லை.

திமுக கூட்டணியில் இருக்கக்கூடிய கட்சிகள், அதிமுக கூட்டணிக்கு வர வாய்ப்புள்ளது. பாஜக கூட கூட்டணி அமைக்க இன்னும் கால அவகாசம் இருப்பதாகத் தெரிவித்துள்ளது. திமுகவுடன் ஏற்கனவே கூட்டணியில் இருக்கும் கட்சிகள் இரண்டு முறை பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்கள். ஆனால் இன்னும் ஒப்பந்தம் ஏற்படவில்லை. 2 முறை தேர்தலை இணைந்து சந்தித்தவர்கள் இடையே இன்னும் தொகுதிப் பங்கீடு நடைபெறவில்லை என்றால் அங்குப் பிரச்சனை இருப்பதாகத் தான் தெரிகிறது.

திமுக கூட்டணியில் அதிருப்தி ஏற்பட்டு வெளியேறுபவர்கள் எங்களுடன் கூட்டணி சேரலாம் இல்லை தனித்துப் போட்டியிடலாம். அதிமுக கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. தொகுதிப் பங்கீடு இறுதி வடிவம் பெற்ற பிறகு அது வெளிச்சத்திற்கு வரும்" என்று தெரிவித்தார்.

இதன் தொடர்ச்சியாகத் தொகுதி கிடைக்காவிட்டாலும் திமுக கூட்டணியில் தொடர்வோம் என்று மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ பேசியது குறித்துக் கேட்டதற்கு, "திமுகவுடன் மதிமுக இணைந்து விட்டதாகத்தான் அர்த்தம். கடந்த சட்டமன்றத் தேர்தலில் கூட திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் தான் மதிமுக வேட்பாளர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.

மதிமுகவை தனிக்கட்சியாக மக்கள் பார்க்கவில்லை, திமுகவுடன் இணைந்த கட்சியாகத்தான் பார்க்கின்றனர். அதைத்தான் துரை வைகோ வெளிப்படையாகச் சொல்லி உள்ளார்" என்று பதில் அளித்தார்.

மேலும், தொடர்ச்சியாகப் பேசிய அவர், "தேசிய கட்சிகளினால் தமிழகத்திற்கு எவ்வித பயனும் இல்லை என்பதால் ஜெயலலிதா நாடாளுமன்றத் தேர்தலில் தனியாகப் போட்டியிட்டார். சட்டமன்றத் தேர்தலிலும் அதிமுக தனித்து நின்று ஆட்சியைப் பிடித்தது. அந்த வழியில் தான் எடப்பாடி பழனிச்சாமி செயல்பட்டு வருகிறார். அதிமுகவைத் தேடி கூட்டணிக் கட்சிகள் வரும்.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் கனிமொழியை எதிர்த்து அதிமுக வெற்றி வேட்பாளர் தான் நிறுத்தப்படுகிறார். கூட்டணிக்கு ஒதுக்க வாய்ப்பில்லை. அதிமுக நிச்சயமாகக் களம் காண்டு வெற்றி பெரும். தமிழகமே திரும்பிப் பார்க்கும் தொகுதியாகத் தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி இருக்கும்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: அரசுப் பள்ளியில் நூலகம் அமைத்துக் கொடுத்த வலிமை பட இயக்குநர் எச்.வினோத்? எஸ்பி பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!

Last Updated : Feb 19, 2024, 3:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.