ETV Bharat / state

"என் மீது ஓராயிரம் வழக்குகள்.. சாகும் வரை கோயில்களுக்காக குரல் கொடுப்பேன்"- பொன் மாணிக்கவேல்! - Ponn Manickavel - PONN MANICKAVEL

Pon Manikkavel CBI Case: என் இறுதி மூச்சிருக்கும் வரை கோயில்களுக்காக குரல் கொடுப்பேன், அர்ச்சகர்கள் மீது தமிழ்நாட்டில் உச்சகட்ட அநியாயங்கள் நடந்து கொண்டிருக்கின்றன என முன்னாள் ஐஜி பொன்.மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.

பொன்.மாணிக்கவேல் மற்றும் சிபிஐ தொடர்பான கோப்புப்படம்
பொன்.மாணிக்கவேல் மற்றும் சிபிஐ தொடர்பான கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 11, 2024, 8:09 AM IST

சென்னை: தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக இருந்து ஓய்வு பெற்றவர் பொன்.மாணிக்கவேல். இவர் தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் டிஐஜி ஆகவும், பிறகு ஐஜி ஆகவும், சிறப்பு அதிகாரியாகவும் பணியாற்றி வந்துள்ளார். மேலும் பல்வேறு அதிரடி கட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வெளிநாடுகளுக்கு கடத்த முயன்ற பல்வேறு பாரம்பரிய சிலைகளை மீட்டு உள்ளார்.

பொன்.மாணிக்கவேல் செய்தியாளர் சந்திப்பு (Credits - ETV Bharat Tamil Nadu)

சிபிஐ ரைடு: இந்த நிலையில் நேற்று காலை முதல் சென்னை பாலவாக்கம் பகுதியில் உள்ள பொன்.மாணிக்கவேல் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி விசாரணை மேற்கொண்டனர். அதாவது சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி-யாக பொன்.மாணிக்கவேல் பணியாற்றியபோது, சிலை கடத்தல்காரர்களுடன் சேர்ந்து சதியில் ஈடுபட்டதாக அதே பிரிவில் பணியாற்றி இடைநீக்கம் செய்யப்பட்ட காதர் பாட்ஷா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2018ல் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இதனை சிபிஐ-க்கு மாற்றி உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் சோதனையானது நடைபெற்றது. சுமார் 7 மணி நேரம் நடைபெற்ற சோதனைக்குப் பின் பொன்.மாணிக்கவேல் செய்தியாளர்களை சந்தித்தார்.

என் மீது ஓராயிரம் வழக்குகள்: அப்போது அவர் கூறுகையில், "டெல்லியிலிருந்து வந்த சிபிஐ அதிகாரிகள் என்னுடைய நேர்மையைப் புகழ்ந்து விட்டுச் சென்றனர். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தேன். அவர்கள் என்னிடம் இருந்து சில ஆவணங்களைப் பெற்றுச் சென்றனர்.

என் மீது ஓராயிரம் வழக்குகள் இருக்கிறது. நான் இறக்கும் வரை என் மீது வழக்குகள் இருக்கும். என்னிடம் இருக்கும் ஆவணங்களைக் கொடுத்து அதிகாரிகளுக்கு உதவி இருக்கிறேன். முன்பிருந்த விசாரணை அதிகாரியிடம் ஆவணங்களைக் கொடுக்க முடியவில்லை.

தற்பொழுது இருக்கும் விசாரணை அதிகாரியிடம் என்னிடம் இருந்த ஆவணங்களைக் கொடுத்திருக்கிறேன். தமிழ்நாட்டிலிருந்து வெளிநாட்டிற்கு 6 சிலைகள் கடத்தப்பட்டது தொடர்பாக விசாரிக்கச் சென்றபோது தான் காவல் ஆய்வாளர் காதர் பாட்சாவிற்கு இந்த கடத்தலில் தொடர்பு இருப்பது கண்டுபிடித்தேன்.

நடராஜர் சிலை கடத்தப்பட்ட வழக்கில் ஒரு குற்றவாளியைக் கூட வெளிநாட்டிலிருந்து அவர் (காதர் பாட்சா) கைது செய்து கொண்டு வரவில்லை. நான் உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கேட்கவில்லை" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், நான் நடவடிக்கை எடுத்த அனைத்து குற்றவாளிகளும் எனக்கு எதிராக ஒன்று சேர்கின்றனர். நீதிபதிகள் கோயில்களைக் கண்காணித்த பொழுது பாதுகாப்பாக இருந்தது. ஆனால் தற்போது கோயில்கள் பாதுகாப்பாக இல்லை. பணி ஓய்வு பெற்ற பின்னரும் சிலர் சொல்வது போல் கூறி நான் எந்த கட்சியிலும் சேரமாட்டேன்.

சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் சந்திர கபூர் கைது செய்து தமிழ்நாட்டிற்குக் கொண்டு வந்தது நான் தான். நான் தான் அவர் மீது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தேன். என் இறுதி மூச்சிருக்கும் வரை கோயில்களுக்காக குரல் கொடுப்பேன். அர்ச்சகர்கள் மீது தமிழ்நாட்டில் உச்சக்கட்ட அநியாயங்கள் நடந்து கொண்டிருக்கிறது. அவர்களுக்காக குரல் கொடுப்பேன்.

அனைத்து குற்றவாளிகளும் ஒன்று சேர்கின்றனர். ஏனென்றால் நான் அதிகாரியாக இருந்தவரை எந்த சிலைகளும் வெளிநாட்டுக்கு செல்லவில்லை. தீனதயாளன் நீதிமன்றத்தில் ஆஜராகி நான் என்னென்ன செய்தேன் என்று கூறியிருக்கிறார். நீதிமன்றம் அதை ஏற்றுக் கொண்டது" என தெரிவித்தார்.

இதனிடையே பொன்மாணிக்கவேல் மீது 120பி, 166, 166ஏ, 167, 182, 193, 199, 506, 195ஏ உள்பட 13 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இயற்கை வேளாண்மை குறித்து A To Z அறிய வேண்டுமா? - தஞ்சையில் மாபெரும் வேளாண் திருவிழா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.