திண்டுக்கல்: ஒற்றைத் தலைமை விவகாரத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்ட பின்னர் நீதிமன்றத்தில் முறையிட்டு வந்தார். இந்நிலையில் அவர் கட்சி பெயர், சின்னம், கொடி பயன்படுத்த நீதிமன்றம் தடைவிதித்த நிலையில் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு என்ற கூட்டத்தை, திண்டுக்கல், கரூர், திருவாரூரில் நடத்தினார்.
அதில், திண்டுக்கல்லில் நடைபெற்ற அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய ஓபிஎஸ், ஒற்றை தலைமை விவகாரத்தில் அதிமுகவில் இருந்து ஓபிஎஸ்-யை நீக்குவதற்கு முன் சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் அதிமுகவில் நடந்த விவகாரங்கள் குறித்துப் பேசினார். சட்டமன்ற தேர்தல் சமயத்தில் எடப்பாடி பழனிசாமியின் நடவடிக்கை குறித்து ஓ.பன்னீர்செல்வம் பேசிய காணொலி தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
-
திண்டுக்கல் மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்! (28-01-2024) - நேரலை https://t.co/XdCcHFl0lg
— O Panneerselvam (@OfficeOfOPS) January 28, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data="
">திண்டுக்கல் மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்! (28-01-2024) - நேரலை https://t.co/XdCcHFl0lg
— O Panneerselvam (@OfficeOfOPS) January 28, 2024திண்டுக்கல் மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்! (28-01-2024) - நேரலை https://t.co/XdCcHFl0lg
— O Panneerselvam (@OfficeOfOPS) January 28, 2024
அதிமுக உரிமை மீட்புக் குழு ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், “முதலமைச்சராக இருந்து தற்போது எதிர்க்கட்சியாக வந்த வரை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணி எந்த தேர்தலிலாவது வெற்றி பெற்றதா? ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தோல்வி, நகர்ப்புற, மாநகராட்சி தேர்தல்களில் தோல்வி, பேரூராட்சிகளில் தோல்வி, நாடாளுமன்றத் தேர்தலில் 39 இடங்களில் போட்டியிட்டோம் 38 இடங்களில் தோல்வி. ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதியிலும் 5, 6 லட்சம் வாக்குகள் வித்தியாசம் மட்டும். ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு தேனி, அந்த தேனியில் தான் ஜெயித்தோம்.
நான் இந்த உண்மையைச் சொல்லியே ஆக வேண்டும். சட்டமன்றத் தேர்தலில் அமித்ஷா சென்னை வந்து என்னையும், எடப்பாடி பழனிசாமியையும் அழைத்துப் பேசினார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் டிடிவி தினகரனின் அமமுக பிரிந்து இருந்ததினால், உங்களுடைய வாக்குகள் எல்லாம் பிரிந்து ஒரு தொகுதி தவிர்த்து எல்லா தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவி இருக்கின்றது. ஆகவே அமமுக டிடிவி தினகரன், சின்னம்மா, ஓபிஎஸ் எல்லாம் இணைந்து போட்டியிட்டால் நாம் உறுதியாகத் தேர்தலை எதிர்கொள்ள முடியும் எனச் சொன்னார்.
இவர் அதெல்லாம் முடியாது! சின்னம்மாவையும் சேர்க்க முடியாது, டிடிவியையும் சேர்க்க முடியாது என்றார். பாஜகவிற்கு ஒதுக்குகின்ற தொகுதியில் ஒரு 20 தொகுதியைச் சேர்த்துக் கொடுங்கள் நான் அவர்களிடம் பேசுகிறேன், நீங்கள் பேச வேண்டாம் என்றார். அதையும் தரமுடியாது என்றார். 15 தொகுதி தரலாமா என்றார், அதையும் தரமுடியாது என்றார். 12 தொகுதியாவது அவர்களுக்குக் கொடுக்கலாமா என்றார், அதையும் தரமுடியாது என்றார். 10 தொகுதியாவது கொடுக்க முடியுமா எனக் கேட்டார், அதையும் தர முடியாது என்றார்.
சரி, நீங்கள் தொகுதி தர மாட்டேன் என்று சொல்லி விட்டீர்கள் நீங்களே நின்று கொள்ளுங்கள். டிடிவி தினகரன் தேர்தலில் போட்டியிட மாட்டார் என்ற உத்தரவாதத்தை நான் அவரிடம் பேசி வாங்கித் தருகிறேன். அவர் சொல்கிற 10 பேருக்கு வாரிய தலைவர் பொறுப்பு கொடுக்கலாமா என அமித்ஷா கேட்டார். இல்லை அதெல்லாம் நான் உறுதி தர முடியாது என்று விட்டார். என்னமோ இவர் இப்போது தான் ஜெயித்து முதலமைச்சராக இருப்பது போல தலைக்கனம் தலைக்கு ஏறி இந்த பதிலைச் சொன்ன உடன் அவர் எழுந்து, இரவு 2 மணிக்கே டெல்லி கிளம்பி விட்டார்.
இது தான் பதவி பித்து. யார் பதவி கொடுத்தது, அம்மா 2 முறை எனக்கு கொடுத்தார். அம்மா நல்ல நிலைக்கு வந்த பின் நானே திருப்பி கொடுத்து விட்டேன். 3வது முறையாகச் சின்னம்மா கொடுத்தார் நான் திருப்பி கொடுத்து விட்டேன். சின்னம்மா தானே முதலமைச்சராக ஆக்கினார், அவருக்கே நம்பிக்கை துரோகம். நம் கட்சி பலமுறை பிரிந்துள்ளது, இணைந்துள்ளது. ஏன்? தொண்டர்களை முச்சந்தியில் நிறுத்தக்கூடாது, அவர்களுக்காக உருவாக்கப்பட்ட இயக்கம் இந்த அதிமுக. அந்த இயக்கத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று நல்லவர்கள் எல்லாம் இணைந்து இருக்கிறோம். ஆனால் உலகத்திலேயே பிரிந்த சக்திகள், பிரிந்த கட்சிகள் இணையக் கூடாது என நினைக்கிற ஒரே ஆள்” என அவர் இடைவெளி விட மேடைக்குக் கீழே இருந்து தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமி எனக் கூறினார்கள்.
தொடர்ந்து பேசிய அவர், “ஒரு நிருபர் கேட்கிறார், சின்னம்மாவை நீங்கள் சேர்த்துக் கொள்வீர்களா? அதற்கு ஒரு சதவீதம் கூட வாய்ப்பில்லை என்றார். எப்படி சின்னம்மாவிடம் ஊர்ந்து ஊர்ந்து ஊர்ந்து போய் பதவி வாங்கினீர்கள். அந்த பதவி மக்களிடம் போய் ஓட்டுக் கேட்டு பழனிசாமி தான் முதலமைச்சர் என மக்கள் ஓட்டு போட்டா முதலமைச்சர் ஆனீர்கள்?
2016இல் அம்மா சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கி, மூன்றாவது முறையாக அம்மா வெற்றி பெற வேண்டும் என மக்களிடம் சென்று, தனது உடல்நிலையைக் கூட பொருட்படுத்தாமல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பெற்ற வெற்றி. அம்மா பெற்ற வெற்றியின் மூலம் தான் பன்னீர்செல்வமும் முதலமைச்சர், நீங்களும் முதலமைச்சர். தேர்தல் மூலமாக நீங்கள் முதலமைச்சர் ஆகவில்லை பழனிசாமி” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: "மதவெறி மாய்ப்போம், மனித நேயம் காப்போம்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை!