ETV Bharat / state

"சுகாதாரமற்ற பானிபூரிகளை விற்றால் கிரிமினல் வழக்கு பாயும்" - உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி எச்சரிக்கை! - Pani Puri Incident

Pani Puri: தமிழகத்தில் சுகாதாரமற்ற பானிபூரிகளை விற்றால் அவர்கள் மீது கிரிமினல் வழக்கு தொடுக்கப்படும் என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சதீஷ்குமார் எச்சரித்துள்ளார்.

பானிபூரி கடையில் அதிகாரிகள் ஆய்வு
பானிபூரி கடையில் அதிகாரிகள் ஆய்வு (Photo Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 2, 2024, 9:42 PM IST

சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் உள்ள பானிபூரி கடைகளில், சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சதீஷ்குமார் தலைமையிலான குழு ஆய்வு மேற்கொண்டு மாதிரிகளை சேகரித்தனர். ஒவ்வொரு கடைகளாகச் சென்று கடைகளுக்கு லைசன்ஸ் இருக்கிறதா என்பதை கேட்டறிந்தனர். மேலும் பானிபூரி, மசால், chat items சுகாதாரமான முறையில் மக்களுக்கு வழங்கப்படுகிறதா என்பது தொடர்பாக ஆய்வு செய்தனர். அதனைத் தொடர்ந்து டீக்கடை, சிப்ஸ் கடை உள்ளிட்ட கடைகளிலும் சோதனை செய்தனர்.

சோதனைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சதீஷ்குமார், "கர்நாடகாவில் உணவு தரக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் பானிபூரியிலிருந்து மாதிரிகளை எடுத்து சோதனை செய்ததில் ரசாயனப் பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. இதே போல் தமிழகத்திலும் சோதனை செய்ய தமிழக அரசு அறிவுறுத்தியிருந்தது.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பானிபூரி சாப்பிடும் நிலையில் கலப்படம், ரசாயனப் பொருட்கள் இருக்கிறதா என்பது தொடர்பாக சோதனை செய்ய உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. அந்த வகையில், இன்று தமிழ்நாடு முழுவதும் அனைத்து பானிபூரி கடைகளிலும் ஆய்வு செய்யப்படுகிறது. குறிப்பாக, சென்னையில் அதிகமாக கடைகள் இருப்பதால் 3 குழுவாக பிரிந்து ஆய்வு செய்ய திட்டமிட்டு இருக்கிறோம். மொத்தமாக 20 நபர்கள் உள்ளோம்.

தெருக்கடைகள், சாட் (chat) கடைகள், பெரிய கடைகள் என மூன்றாக பிரித்து அனைத்து வகையாக ஆய்வுகளும் மேற்கொள்ளப்படும். இந்த ஆய்வு முழுமையாக முடிய 2 அல்லது 3 நாட்கள் எடுத்துக்கொள்ளும். மேலும், ஆய்வு செய்யும் போது எடுக்கப்பட்ட மாதிரிகளை பரிசோதனைக்கு அனுப்பப்படும். முடிவுகள் வர 5 முதல் 10 நாட்கள் வரை எடுத்துக் கொள்ளும். பானிபூரி கடைகள் எவ்வாறு நடத்த வேண்டும் என பயிற்சி வழங்க இருக்கிறோம்.

இந்த ஆய்வின் போது பானிபூரி அல்லது அதற்கு பயன்படுத்தும் ரசம் (பானி) சுகாதாரமாக இல்லை என்றால் உடனடியாக அவைகள் பறிமுதல் செய்யப்படும். மேலும், ஆய்வுக்கு அனுப்பப்படும் பானிபூரி மற்றும் ரசம் சுகாதாரமாக இல்லாமல் உடலுக்கு தீங்கு தரும் வேதியியல் பொருட்கள் கலக்கப்பட்டுள்ளது என தெரியவந்தால் அவர்கள் மீது கிரிமினல் வழக்கு தொடுக்கப்படும்.

மக்கள் சுகாதாரமான பானிபூரிகளை உட்கொள்ளலாம். குறிப்பாக, கையுறை பயன்படுத்தி பாதுகாப்பான முறையில் அளிக்கப்படும் பானிபூரிகளை சாப்பிடலாம். மேலும், பானி லைட் பச்சை நிறத்தில் இருக்க வேண்டும். அதிக பச்சை நிறத்தில் இருந்தால் அதை சாப்பிடக்கூடாது” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: கர்நாடகா பானிபூரி சம்பவம் எதிரொலி; தமிழகம் முழுவதும் பறந்த உத்தரவு! - Pani Puri inspection in TN

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.