ETV Bharat / state

மகா சிவராத்திரி; பல்வேறு இடங்களில் பூக்களின் விலை பன்மடங்கு உயர்வு!

Madurai Malligai price: நாளை மகா சிவராத்தி என்பதால் மதுரை, தென்காசி மாவட்டங்களில் பூக்களின் விலை அதிகரித்துள்ளது.

மதுரை
மதுரை
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 7, 2024, 4:17 PM IST

மதுரை: மதுரை மாட்டுத்தாவணி எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம் அருகே அமைந்து உள்ளது, மலர் வணிக வளாகம். இங்கு மதுரை மாவட்டத்தில் இருந்து மட்டுமின்றி, சுற்று வட்டார மாவட்டங்களான திண்டுக்கல், தேனி, விருதுநகர், ராமநாதபுரம், சிவங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.

மத்திய அரசின் புவிசார் குறிபீடு அங்கீகாரத்தைப் பெற்றுள்ள மதுரை மல்லிகை, அதன் மணம், தன்மை ஆகியவற்றில் தனிச்சிறப்பு மிக்கதாக விளங்குகிறது. மலேசியா, சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கும் மதுரையில் இருந்து மல்லிகை ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதேபோல், மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் நாளொன்றுக்கு சராசரியாக 50 டன்னுக்கு மேலாக பூக்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

இந்த நிலையில், நாளை மகா சிவராத்திரி என்பதால், பூக்களின் விலையில் ஏற்றம் காணப்பட்டுள்ளது. மல்லி, பிச்சி, முல்லை ஆகிய பூக்களின் விலை கிலோ 800 ரூபாய்க்கும், சம்பங்கி மற்றும் அரளி கிலோ 400 ரூபாய்க்கும், பட்டன் ரோஸ், பன்னீர் ரோஸ் 200 ரூபாய்க்கும், செவ்வந்தி 250 ரூபாய்க்கும், செண்டு மல்லி 80 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தென்காசியில் பூக்கள் விலை: இதேபோன்று, தென்காசி மாவட்டத்திற்கு உட்பட்ட கடையநல்லூர், புளியங்குடி, சங்கரன்கோவில் சுற்று வட்டாரப் பகுதிகளிலும் பூக்களின் விலை உயர்ந்துள்ளது. இப்பகுதிகளில் மல்லி, பிச்சி ஆகிய பூக்கள் கிலோ 1,000 ரூபாய்க்கும், கனகாம்பரம் பூ 600 ரூபாய்க்கும், சம்பங்கி பூ 350 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் கேந்தி பூ, சேவல் பூ உள்ளிட்ட பூக்களின் விலையும் கனிசமாக உயர்ந்துள்ளது.

தேனி: தேனி மாவட்டம், பெரியகுளம் பகுதியில் சாதாரணமாக செவ்வந்தி பூ கிலோ 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும். இந்த சூழலில் நாளை சிவராத்தி என்பதால் பூக்களின் விலை 250 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் விவசாயிகள் இன்று பிற்பகல் முதல் செவ்வந்தி பூவை அறுவடை செய்து விற்பனைக்கு அனுப்ப உள்ளனர்.

மேலும், இது குறித்து வியாபாரிகள் தெரிவித்துள்ளதாவது, "தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், பூக்களின் வரத்து குறைவாக உள்ளது. விவசாயம் செய்யும் பூக்கள் இடைத்தரகர்கள் மூலம் பூக்கள் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது. மேலும், நாளை (மார்ச் 8) மகா சிவராத்தி என்பதால் பூக்களின் விலை அதிகரித்துள்ளது. விலை அதிகரித்தாலும் மக்கள் போட்டி போட்டு கொண்டு பூக்களை வாங்கிச் செல்கின்றனர். இதனால் வியாபாரம் சிறப்பாக உள்ளது" எனத் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: நாடாளுமன்ற தேர்தல் 2024: தென்காசி எம்.பி., தனுஷ் எம்.குமார் செய்ததும், செய்யத் தவறியதும்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.