ETV Bharat / state

தமிழ்நாட்டில் 5 ஆண்டு சட்டப் படிப்புகளுக்கான விண்ணப்ப தேதி அறிவிப்பு! - five year law courses application - FIVE YEAR LAW COURSES APPLICATION

The Tamil Nadu DR.Ambedkar Law University: தமிழ்நாட்டில் உள்ள அரசு சட்டக் கல்லூரி மற்றும் தனியார் கல்லூரிகளில் உள்ள ஐந்தாண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்புகளில் சேர மே 10 முதல் 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் புகைப்படம்
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் புகைப்படம் (credit to The Tamil Nadu DR Ambedkar Law University)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 4, 2024, 9:33 PM IST

சென்னை: தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ், திருவள்ளூர், மதுரை, திருச்சி, வேலூர், செங்கல்பட்டு (திருப்போரூர் தாலுகா), கோயம்புத்தூர், திருநெல்வேலி, விழுப்புரம், தருமபுரி, ராமநாதபுரம், சேலம், நாமக்கல், தேனி, காரைக்குடி உள்ளிட்ட 15 இடங்களில் அரசு சட்டக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன.

அதேநேரம், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் திண்டிவனம், புதுக்கோட்டை, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்களில் தனியார் சட்டக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன.

மேற்குறிப்பிட்ட கல்லூரிகளில் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்புகளில் சேர மே 10 முதல் மே 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. மேலும், அரசு சட்டக் கல்லூரியில் 1,692 இடங்களும், தனியார் சட்டக் கல்லூரியில் 312 இடங்களும் காலியாக உள்ளன.

விருப்பமுள்ளவர்கள் http://tndalu.ac.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என பல்கலைக்கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மூன்றாண்டு சட்டப் படிப்பு, முதுநிலை சட்ட மேற்படிப்பு ஆகியவற்றுக்கான மாணவர் சேர்க்கை தொடர்பான அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இது குறித்தான முழு விவரம் அறிய தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை மாணவர்கள் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: திண்டுக்கல்லில் மின்சாரம் தாக்கி ஆண் யானை உயிரிழப்பு! - Elephant Died By Electrocution

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.