ETV Bharat / state

5 மாணவ, மாணவிகள் மருத்துவ படிப்புக்கு தேர்வு.. வானுயர வைத்த புதுக்கோட்டை வயலோகம் அரசுப் பள்ளி..! - Pudukkottai govtschool MBBS student

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே உள்ள வயலோகம் அரசு மேல்நிலைப்பள்ளியில் இருந்து 7.5 விழுக்காடு உள் ஒதுக்கீட்டின் கீழ் 5 மாணவர்கள் மருத்துவ படிப்பிற்கு தேர்வாகியுள்ளது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

மருத்துவ படிப்பிற்கு தேர்வாகியுள்ள மாணவர்கள்
மருத்துவ படிப்பிற்கு தேர்வாகியுள்ள மாணவர்கள் (Credits- ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 29, 2024, 2:30 PM IST

புதுக்கோட்டை: தமிழ்நாட்டில் 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு ஏழை மாணவர்களின் 'மருத்துவர்' கனவை நனைவாக்கி வருகிறது. கடந்த ஆண்டு 584 பேர் மருத்துவ படிப்பில் சேர்ந்த நிலையில், இந்த ஆண்டு 622 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம் படிக்க இடம் கிடைத்துள்ளது. இதில் புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே உள்ள வயலோகம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்ற 5 மாணவ, மாணவிகள் தேர்வாகியுள்ளது, அப்பகுதி மக்கள் இடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை வயலோகம் அரசுப் பள்ளி (Credit - ETV Bharat Tamil Nadu)

வயலோகம் அரசு பள்ளியில் மொத்தம் 798 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியின் தலைமை ஆசிரியராக ஜெயராஜ் பணியாற்றி வருகின்றனர். இங்கு 11 மற்றும் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பள்ளி நேரம் போக காலை மற்றும் மாலை வேலைகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தி மருத்துவம் மற்றும் பொறியியல் துறையில் மாணவர்கள் தேர்ச்சி பெறுவதற்கும் பெரிதும் உதவி வருகின்றன. இதனை பயன்படுத்தி இப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களில் இலவசமாக கல்வி பயின்று வருகின்றனர்.

5 மருத்துவ மாணவர்கள்: இந்நிலையில் கடந்த 2021 - 2022-ஆம் ஆண்டுகளில் படித்த சுதாகர் மற்றும் சுபாஸ்ரீ, 2022 - 2023-ஆம் படித்த ஆர்த்தி, ஜெயந்தி, கடல் வேந்தன் என ஐந்து மாணவர்கள் இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மூன்று மாணவர்கள் அரசு மருத்துவக் கல்லூரியிலும் இரண்டு மாணவர்கள் தனியார் மருத்துவ கல்லூரியிலும் மருத்துவம் படிக்கத் தேர்வாகியுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்த வருடம் நீட் தேர்வில் 33 மாணவர்கள் தேர்ச்சி பெற்ற நிலையில், 28 பேர் எம்பிபிஎஸ் படிப்பிற்கும், ஐந்து பேர் பிடிஎஸ் படிப்பிற்கும் தேர்வாகியுள்ளனர். இதில் வயலோகம் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்த ஐந்து மாணவர்கள் தேர்வாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து இந்த மாணவர்களை பாராட்டும் விதமாக அரசு மேல்நிலைப் பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது. தலைமையாசிரியர் ஜெயராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த பாராட்டு விழா நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர், இருபால் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் மருத்துவ மாணவர்களுக்கு பொன்னாடை போர்த்தி, ஸ்டெதாஸ்கோப் அணிவித்து, விருது உள்ளிட்ட பரிசுகளை வழங்கி கௌரவித்தனர்.

கஷ்டப்பட்டுப் படிக்காதே இஷ்டப்பட்டு படி: இதனைத் தொடர்ந்து மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய மருத்துவ மாணவர்கள், "இந்தப் பாராட்டு விழாவில் கலந்து கொண்டுள்ள மாணவர்கள், எங்களைப் போன்று கடினமாக உழைத்து நல்ல நிலைமைக்கு வர வேண்டும். உங்களது உழைப்பிற்கு ஆசிரியர்கள் உறுதுணையாக இருப்பார்கள். இதனை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஆசிரியர்கள் கொடுத்த அறிவுரையாலும் பயிற்சியும் தான்,எங்களை இங்கே கொண்டு வந்து நிறுத்தி உள்ளது. கஷ்டப்பட்டு படிப்பதை விட இஷ்டப்பட்டு படித்தால் தேர்வில் வெற்றி பெறலாம்.மருத்துவ துறைக்குத் தேர்வானதன் மூலம் எங்களைப் போன்று முயற்சி செய்பவர்களுக்கு நிச்சயம் நாங்கள் உதவுவோம்"என்றனர்.

இதனைத் தொடர்ந்து நம்மிடையே பேசிய தலைமை ஆசிரியர் ஜெயராஜ், "7.5 சதவீத இட ஒதுக்கீடு என்பது அரசு பள்ளி மாணவர்களுக்கு மிகுந்த வரப்பிரசாதமாக உள்ளது. இட ஒதுக்கீட்டின் கீழ் இதுவரை நமது பள்ளியில் 8 மாணவர்கள் தேர்வாகியுள்ளனர். இனிவரும் காலங்களில் அதிக அளவு முயற்சித்து இது போன்ற மருத்துவம் மற்றும் பல்வேறு உயர் படிப்பிற்கு மாணவர்களை தயார் செய்வோம்" என பெருமிதத்துடன் கூறினார்.

இதையும் படிங்க: “சிகிச்சைக்கு பணம் தடையாக இருக்கக்கூடாது”.. கமலை கிராமத்தில் மலர்ந்த முதல் இரண்டு மருத்துவர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.