ETV Bharat / state

அரியலூரில் தனியார் பள்ளி வேன் கவிழ்ந்த விபத்தில் 5 குழந்தைகள் படுகாயம்! - School Van Accident In Ariyalur - SCHOOL VAN ACCIDENT IN ARIYALUR

School Van Accident In Ariyalur: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தனியார் பள்ளி வேன் கவிழ்ந்ததில் காயம் அடைந்த ஐந்து குழந்தைகள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Private  School Van Accident In Ariyalur
Private School Van Accident In Ariyalur
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 22, 2024, 9:20 PM IST

அரியலூர்: அரியலூர் அருகே வெங்கட கிருஷ்ணாபுரத்தில் செயல்படும் தனியார்ப் பள்ளி ஒன்றில், அப்பகுதியைச் சேர்ந்த குழந்தைகள் ஏராளமானோர் பயின்று வருகின்றனர். இந்த நிலையில், அப்பள்ளியில் பயிலும் சிறுவர்களை எப்போதும், பள்ளி வாகனத்தில் அழைத்து வந்து மீண்டும் அவர்களது வீட்டிற்கு அழைத்துச் செல்வது வழக்கம்.

இந்த நிலையில், வழக்கம்போல இன்று (ஏப்.22) மாலை சுமார் அப்பள்ளியில் பயிலும் 41 பள்ளிச் சிறுவர்களை ஏற்றிக்கொண்டு பள்ளி வாகனம் அவரவர்கள் வீட்டில் இறக்கி விட சென்றது. இந்தப் பள்ளி வாகனத்தை அரியலூர் வாலாஜாநகரைச் சேர்ந்த ஓட்டுநர் பன்னீர்செல்வம் (67) என்பவர் ஓட்டிச் சென்றார்.

அப்போது, பள்ளி வாகனம் வெண்மான்கொண்டான் அருகே சென்று கொண்டிருந்தபோது ஓட்டுநர் பன்னீர்செல்வத்தின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் வாகனத்தில் பயணம் செய்த பள்ளிக் குழந்தைகள் ஐந்து பேர் காயம் அடைந்தனர்.

இந்த பள்ளியில் இரண்டாம் வகுப்பு பயின்று வரும் வெண்மான்கொண்டான் கிராமத்தைச் சேர்ந்த வேல்முருகன் மகன் வைசாந்த் (7), வெங்கடேசன் என்பவரின் யுகேஜி பயிலும் மகள் வர்ணிஷா (5), ஞானசேகரன் என்பவரின் 5ஆம் வகுப்பு பயிலும் மகன் ஹேம்நாத் (9), தத்தனூர் பொட்ட கொல்லை கிராமத்தைச் சேர்ந்த குமார் என்பவரின் நான்காம் வகுப்பு பயிலும் மகன் கிரிலக்சன் (9), அதே ஊரைச் சேர்ந்த மகேந்திரன் என்பவரின் நான்காம் வகுப்பு பயிலும் மகள் நக்ஷத்திரா(9) உள்ளிட்ட ஐந்து குழந்தைகள் காயமடைந்து ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இதுகுறித்து உடையார்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சூழலில் பள்ளி வேன் கவிழ்ந்த சம்பவம் ஜெயங்கொண்ட பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இரு நண்பர்களுக்கு இடையே மோதல்.. பஞ்சாயத்து செய்ய வந்த நண்பனுக்கு கத்திக்குத்து.. நாகர்கோவில் பகீர் சம்பவம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.