ETV Bharat / state

திருப்பத்தூரில் சிறுத்தை பதுங்கி இருந்த கார் செட்டில் சிக்கிய ஐந்து நபர்கள் ஏழு மணி நேரத்துக்குப் பின் மீட்பு! - Leopard Entered In Tirupathur

Leopard Entered In Tirupathur: திருப்பத்தூரில் சிறுத்தை பதுங்கி இருந்த கார் செட்டிற்குள் சிக்கிக்கொண்ட 5 நபர்களை சுமார் 7 மணி நேரப் போராட்டத்திற்குப் பின் வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.

மீட்கப்பட்ட நபர்களின் புகைப்படம்
மீட்கப்பட்ட நபர்களின் புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 14, 2024, 10:50 PM IST

திருப்பத்தூர்: திருப்பத்தூர் நகராட்சிக்குட்பட்ட சாமநகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இத்தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற வனத்துறையினர், சிறுத்தையைத் தேடியுள்ளனர். அப்போது வீட்டிலிருந்து சிறுத்தை, அருகே உள்ள தனியார் பள்ளி வளாகத்திற்குள் தாவியுள்ளது.

அதன்பின், பள்ளியில் இருந்த சிறுத்தை அருகே உள்ள கார்செட்டிற்குள் நுழைந்தது. சிறுத்தை பதுங்கி இருந்த கார் செட்டில் இரண்டு கார்கள் இருந்தன. அதில் ஒரு காரில் பாஸ்கர், இம்ரான், தினகரன், சுவாமிஜி ஆகிய நான்கு பேரும், மற்றொரு காரில் எம்ஜிஆர்(எ) வெங்கடேஷ் உள்ளிட்ட 5 நபர்கள் சிக்கிக்கொண்டு தவித்தனர். காரில் சிக்கிய 5 நபர்களை மீட்பதில் வனத்துறையினர் நீண்ட நேரம் போராடினர். சுமார் 7 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு ஐந்து நபர்களை பத்திரமாக மீட்டனர்.

பின்னர் வெளியே வந்த நபர்கள் கூறுகையில், "காரின் ஜன்னல், கதவு கூட திறக்க முடியாத அளவிற்கு பீதியாக இருந்தது. இந்த 7 மணி நேரத்தில் இயற்கை உபாதைக்கு கூட செல்ல முடியாமல் உடல் சோர்வானது. அவ்வப்போது அதிகாரிகள் தங்களைத் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினர்” என்றனர்.

பின்னர் அவர்கள் ஐந்து பேரும் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதையும் படிங்க: நாய்களின் உளவியல் குறித்து விரிவான ஆய்வு நடத்த அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு! - Madras High Court

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.