ETV Bharat / state

மதுரை அருகே நிகழ்ந்த விபத்தில் 6 பேர் பலி.. பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி! - Madurai Accident - MADURAI ACCIDENT

Madurai Car Accident: திருமங்கலம் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதிய கோர விபத்தில், குழந்தை உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து நிகழ்ந்த போது அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான நெஞ்சை பதைபதைக்க வைக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 10, 2024, 11:40 AM IST

Updated : Apr 10, 2024, 1:56 PM IST

மதுரை விபத்து காட்சி

மதுரை: மதுரை மாநகர் வில்லாபுரம் பகுதியைச் சேர்ந்த கனகவேல், விருதுநகர் மாவட்டம் தளவாய்புரத்தில் உள்ள மாரியம்மன் கோயில் பூ மிதி திருவிழாவில் பங்கேற்க குடும்பத்துடன் சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு இன்று(புதன்கிழமை) காலை மதுரை நோக்கி தனது காரில் வந்து கொண்டிருந்தார்.

இந்த நிலையில் திருமங்கலம் அருகே சிவரக்கோட்டை நான்கு வழிச்சாலையில் அதிவேகமாக சென்ற கார், முன்னால் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவற்றில் இடித்தோடு தலைக்குப்புற கவிழ்ந்தது.

இந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த நிலையூர் பகுதியை சேர்ந்த கொய்யாப்பழ வியாபாரி பாண்டி சாலையில் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார்.

மேலும், விபத்தில் சிக்கிய காரில் பயணம் செய்த கனகவேல் மற்றும் அவரது மனைவி கிருஷ்ணகுமாரி, உறவினர் நாகஜோதி குழந்தை உட்பட 4 பேரும் உயிரிழந்தனர். படுகாயங்களுடன் மூவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து தொடர்பாக கள்ளிக்குடி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, விபத்தில் படுகாயமடைந்த 8 வயது சிறுமி சிவஸ்ரீ சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 6-ஆக உயர்ந்துள்ளது. இந்த கோர விபத்தின் காட்சிகள் நெடுஞ்சாலை கண்காணிப்பிற்காக வைக்கப்பட்டுள்ள கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: ஐடி ரெய்டு எல்லாம் விசிக பயணத்தை தடை செய்ய முடியாது: திருமாவளவன் விளக்கம்! - Lok Sabha Election 2024

Last Updated : Apr 10, 2024, 1:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.