ETV Bharat / state

பல லட்சம் மதிப்புள்ள வலைகள் எரிந்து நாசம்; பரிதவிக்கும் திருவள்ளூர் மீனவர்கள் - Fishing nets burn in Tiruvallur - FISHING NETS BURN IN TIRUVALLUR

Fishing nets burn in Tiruvallur: திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு பகுதியில் 80 லட்சம் ரூபாய் மதிப்பிலான மீன்பிடி வலைகள் தீயில் எரிந்து சேதமாகியதால் மீனவர்கள் வேதனைக்கு உள்ளாகினர்.

எரிந்து சேதமாகிய மீன்பிடி வலைகள்
எரிந்து சேதமாகிய மீன்பிடி வலைகள் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 24, 2024, 12:36 PM IST

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு அடுத்த லைட்ஹவுஸ் ஊராட்சிக்குட்பட்ட அரங்கம் குப்பம் கிராமத்தில் நள்ளிரவு 2 மணி அளவில் படகுகள் நிறுத்துமிடத்திலிருந்து நெருப்புப் புகை வெளிவந்துள்ளது. இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் ஓடிச்சென்று இந்த இடத்தில் பார்க்கும்போது மீனவர்கள் கடலுக்கு எடுத்துச் சென்றுவிட்டு கரையில் வைத்திருந்த மீன்பிடி வலைகள் எரிந்து கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து உடனடியாக கிராம நிர்வாகிகளிடமும், பொதுமக்களிடமும் தகவல் அளித்ததின் பேரில் அனைவரும் ஓடிச்சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் அருகில் இருந்த வலைகள் எரிந்து சாம்பலாகாமல் இருப்பதற்கு வலைகளை மீட்கும் பணியிலும் ஈடுபட்டனர். இருப்பினும் ஏராளமான மீன்பிடி வலைகள் எரிந்து சாம்பல் ஆனது.

இதுகுறித்து உடனடியாக திருப்பாலைவனம் காவல்துறையினருக்குத் தகவல் அளித்தனர். இத்தகவலின் அடிப்படையில் திருப்பாலைவனம் காவல்துறையினர் விரைந்து வந்து இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மீன்வளத் துறை அதிகாரிகளும் வந்து பார்வையிட்டு எதனால் இந்த தீ பரவியது என்பது குறித்தும், எவ்வளவு சேதாரம் என்பது குறித்தும் பாதிக்கப்பட்ட மீனவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவத்தில் சுமார் 50 மீனவர்களுக்குச் சொந்தமான சுமார் 80 லட்சம் ரூபாய் மதிப்பிலான மீன்பிடி வலைகள் எரிந்து சாம்பலாகி உள்ளதாகவும், இதனால் தங்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மீனவர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். இதனால் எரிந்த வலைகளுக்குச் சொந்தமான மீனவர்கள் தற்போது மீன்பிடிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

தங்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு மீனவர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மேலும் இச்சம்பவத்தால் லைட்ஹவுஸ் கடற்கரை பகுதியில் உள்ள பெரும்பான்மையான மீனவர்கள் மீன்பிடிக்கக் கடலுக்கு செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: தொடரும் அட்டூழியம்: தமிழக மீனவர்கள் 9 பேர் இலங்கை கடற்படையால் சிறைபிடிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.