ETV Bharat / state

பாகிஸ்தான் சிறையில் வாடும் காசிமேடு மீனவர்கள்.. கண்ணீரில் தத்தளிக்கும் குடும்பங்கள்.. அரசுக்கு மீனவர் சங்கம் கோரிக்கை! - KASIMEDU FISHERMEN

கடந்த 11 மாதங்களாக பாகிஸ்தான் சிறையில் இருக்கும் காசிமேடு மீனவர்களை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லையென்றால் போராட்டம் நடத்தப்படும் என அனைத்து மீனவர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

, அனைத்து மீனவர்கள் சங்கத்தின் தலைவர் நாஞ்சில் ரவி,
, அனைத்து மீனவர்கள் சங்கத்தின் தலைவர் நாஞ்சில் ரவி, (Photo Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 11, 2024, 4:15 PM IST

சென்னை: தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் 7 பேர் கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பரில், குஜராத் மாநிலம் போர் பந்தர் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்குள் மீன் பிடிக்க சென்றுள்ளனர். இவர்கள், கடந்த டிசம்பர் 28 இல் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி பாகிஸ்தான் கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளதாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் வந்துள்ளது.

பாகிஸ்தான் கடற்படையால் கைது செய்யப்பட்டு மீனவர்களை மீட்பதற்காக அவர்களது குடும்பத்தினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டும் இதுவரையில் எந்த நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், பாகிஸ்தான் சிறையில் வாழும் மீனவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து மீனவர்கள் சங்கத்தின் தலைவர் நாஞ்சில் ரவி கோரிக்கை மனு அளித்துள்ளார்.

சிறையில் உள்ள மீனவர்களின் மனைவிகள் மற்றும் மீனவர்கள் சங்கம் தலைவர் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

இது குறித்து சிறையில் உள்ள அசோகன் என்பவரின் மனைவி ஜமுனா ஈடிவி பாரத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியதாவது, “குழந்தை பிறந்த 15 நாளில் எனது கணவர் கடலுக்கு மீன் பிடிக்க சென்றார். காட்ந்த 11 மாதங்களாக அவரை பற்றி எந்த தகவலும் இல்லை. வருமானம் இல்லாமல், குழந்தைக்கு பால் வாங்குவதற்கு கூட கடன் வாங்கும் நிலையில் வாழ்ந்து வருகிறோம். எனது கணவரின் தாயாரும் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால் என்ன செய்வது என்று தெரியாமல் கணவரை மீட்க போராடி வருகிறேன்” என்றார்.

தொடர்ந்து, சிறையில் உள்ள அருள்தாஸ் என்பவரின் மனைவி தனபாக்கியம் பேசுகையில், “தனது கணவர் சிறையில் உள்ளார் என்ற தகவல் அறிந்ததும், காவல் நிலையத்தில் சென்று கணவரை மீட்க நடவடிக்கை எடுக்க புகார் அளித்தேன். ஆனால், இதுகுறித்து எழிலகத்தில் புகார் அளிக்க வேண்டும் என தெரிவித்தனர். இதனால், எழிலகம் சென்று அங்கு என் கணவரை மீட்டு தர நடவடிக்கை எடுக்க புகார் அளித்தோம்.

புகார் அளித்து 3 மாதங்கள் ஆகியும் நடவடிக்கை எடுக்காததால், மீண்டும் அங்கு சென்று பார்த்த நிலையில், அவர்கள் அப்போது தான் நாங்கள் கொடுத்த மனுவை பிரித்துப் பார்த்தனர்.எனது கணவரை மீட்க, மீன்வளத்துறை என அனைத்து இடங்களிலும் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என்றார்.

இதையும் படிங்க: காசிமேடு மீனவர் படகில் சிக்கிய ராக்கெட் லாஞ்சர்!

இதுகுறித்து அனைத்து மீனவர்கள் சங்கத்தின் தலைவர் நாஞ்சில் ரவி ஈடிவி பாரத்திற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, “காசிமேடு மீனவர்கள் 6 பேர், கன்னியாகுமரி மீனவர் ஒருவர் உட்பட தமிழக மீனவர்கள் 7 பேரும், குஜராத்தைச் சேர்ந்த 8 மீனவர்கள் உட்பட 15 மீனவர்கள், கடந்த டிசம்பர் 2023-ல் குஜராத்தில் இருந்து மீன் பிடிக்கச் சென்றவர்கள், எல்லைத் தாண்டி மீன் பிடிக்கச் சென்றதாக, பாகிஸ்தான் கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பட்டுள்ளதாக சிறையில் உள்ள மீனவர்கள் அவர்களது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதில், ஆண்டனி ராஜ், அருள் தாஸ், கருணாகரன், அஷோக், பாலமுருகன், முருகன், ராஜன் ஆகிய தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். அவர்களை மீட்க அவர்கள் குடும்பத்தினர் பல்வேறு புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் அரசு சார்பில் எடுக்கப்படவில்லை. கடந்த 11 மாதங்களாக அரசு அலுவலகங்களை சுற்றி வருவதே இவர்களின் வேலையாக உள்ளது.

தினப்படி வழங்காத அரசு: தமிழ்நாடு அரசு, மீனவர் வெளிநாட்டு சிறையில் சிறை வைக்கப்பட்டால் அவர்களைன் குடும்பத்தை பாதுகாப்பதற்காக, முதலமைச்சரின் நேரடி மேற்பார்வையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை மாவட்ட ஆட்சியர்கள் நேரில் சந்தித்து, சிறையில் இருப்பவர்கள் விடுதலை ஆகும் வரை அவர்களின் குடும்பத்திற்கு தினப்படியாக ரூ.350 வழங்க வேண்டும். ஆனால், 11 மாதங்களாக பாதிக்கப்பட்ட இந்த மீனவர்களுக்கு எந்தவித தினப்படியும் இதுவரை வழங்கப்படவில்லை.

வெளியுறவு துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்: மேலும், இவர்கள் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் நாடாளுமன்ற உறுப்பினரோ, சட்டமன்ற உறுப்பினரோ இதுவரை இவர்களை வந்து பார்க்கவில்லை. எனவே, பாகிஸ்தான் சிறையில் வாடும் மீனவர்களை மீட்க அனைத்து மீனவர்களின் சங்கத்தின் சார்பில் கோரிக்கை வைத்துள்ளோம். வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்திடம் பேசி மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

போராட்டம் : மேலும், பாராளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, கலாநிதி வீராசாமி மற்றும் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நேரடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு, பாகிஸ்தான் சிறையில் இருக்கும் மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் தமிழகத்தில் உள்ள அனைத்து மீனவர்களையும் ஒன்றிணைத்து, அனைத்து மீனவர்கள் சங்கத்தின் சார்பில் போராட்டம் நடத்துவோம்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.