ETV Bharat / state

தனியார் பெயிண்ட் தொழிற்சாலையில் தீ விபத்து; தீயை அணைக்க வீரர்கள் பல மணி நேரம் போராட்டம்! - paint factory Fire accident - PAINT FACTORY FIRE ACCIDENT

Paint factory Fire accident: விச்சூர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான பெயிண்ட் கிடங்குகளில், திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதி முழுவதும் புகைமண்டலமாக காட்சியளித்தது.

புகைமண்டலமாக காட்சியளிக்கும் மணலி பகுதி
புகைமண்டலமாக காட்சியளிக்கும் மணலி பகுதி (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 17, 2024, 11:41 AM IST

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் மிஞ்சூர் அடுத்த மணலி புதுநகர் அருகே விச்சூர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான பெயிண்ட் கிடங்கு உள்ளது. அதில் ஒரு இடத்தில் நேற்று மாலை திடீரென தீப்பற்றியுள்ளது. அக்கிடங்கு முழுவதும் பெயிண்ட் தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் இருப்பதால், தீ மளமளவென பரவி கிடங்கு முழுவதும் எரியத் தொடங்கியது.

புகைமண்டலமாக காட்சியளிக்கும் மணலி பகுதி (Credits - ETV Bharat Tamil Nadu)

இச்சம்பவம் குறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டதன் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செங்குன்றம், மாதவரம், அம்பத்தூர், தண்டையார்பேட்டை, வண்ணாரப்பேட்டை வ.உ.சி நகர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இது மட்டுமல்லாது 3 ஸ்கை லிஃப்ட் வாகனங்களும் வரவழைக்கப்பட்டு, தண்ணீரை பீச்சி அடித்து தீயை கட்டுப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது.

இருப்பினும் பெயிண்ட் தயாரிப்பதற்கான இரசாயன மூலப்பொருட்கள் கொண்ட பேரல்கள் வெடித்து சிதறியதால், தீயை கட்டுக்கு கொண்டுவருவதில் சிக்கல் நீடித்தது. மேலும் கூடுதலாக தீயணைப்பு வாகனங்களை வரவழைத்து அருகில் உள்ள தொழிற்சாலைகளுக்கு தீ பரவாமல் தடுக்கும் பணியிலும் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டனர். வானளவு கரும்புகை எழுந்துள்ளதால், அந்த பகுதி முழுவதுமே புகை மண்டலமாக காட்சியளித்தது.

அங்கு கூடியிருக்கும் மக்களை அப்புறப்படுத்திய காவல் துறையினர், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து மணலி புதுநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இத்தீவிபத்தில் தொழிற்சாலை வளாகத்தில் உள்ள 2 கட்டிடங்களும், பல கோடி ரூபாய் மதிப்பிலான மூலப்பொருட்களும், பெயிண்ட் வகைகளும் தீக்கிரையாகிருக்கலாம் என கூறப்படுகிறது.

இதையும் படிங்க: வருமான வரி அதிகாரி போல் நடித்து கொள்ளை முயற்சி! தலைநகரை அலறவிட்ட குற்றச் செய்திகள்! - Chennai Crime News

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.