ETV Bharat / state

தேனி புதிய பேருந்து நிலையம் குப்பைக் கிடங்கில் திடீர் தீ விபத்து! - Theni bus stand fire accident - THENI BUS STAND FIRE ACCIDENT

Theni bus stand fire accident: தேனி புதிய பேருந்து நிலையத்தில் தேனி நகராட்சி சார்பாக அமைக்கப்பட்டு இயங்கி வரும் குப்பைக் கிடங்கில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தேனி புதிய பேருந்து நிலையம் குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்து புகைப்படம்
தேனி புதிய பேருந்து நிலையம் குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்து புகைப்படம் (Credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 7, 2024, 8:13 PM IST

தேனி: தேனி புதிய பேருந்து நிலையத்தில் கோயம்புத்தூர், திருப்பூர் ஆகிய பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகள் நிறுத்துமிடத்தின் அருகே, தேனி நகராட்சி சார்பாக குப்பைக்கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குப்பைக் கிடங்கில் குப்பைகளை தரம் பிரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தேனி நகராட்சி பகுதியில் உள்ள குப்பைகளை இங்கு கொண்டு வந்து மக்கும் குப்பை மற்றும் மக்கா குப்பைகளை தரம் பிரிக்கும் பணியில் ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில், இன்று மாலை 3 மணியளவில், அங்கு வைத்திருந்த பிளாஸ்டிக் பொருட்களில் திடீரென்று தீ பற்றி எரியத் தொடங்கியுள்ளது.

சிறிய அளவில் பற்றி எரிந்த தீ, வெயிலின் காரணமாக மளமளவென பெருமளவில் எரியத் தொடங்கியது. இதனால், பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த பொதுமக்கள் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டதால், பேருந்து நிலையத்தில் இருந்து அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

பின்னர், பேருந்து நிலையத்தில் உள்ள கடைக்காரர்கள் தேனி தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் 1 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். தேனி நகராட்சி மக்கும் குப்பை, மக்காத குப்பை கிடங்கில் வைக்கப்பட்டுள்ள 2 லட்சம் மதிப்பிலான பிரிக்கும் இயந்திரம் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் முற்றிலும் எரிந்து சேதமானது.

இந்த தீ விபத்தில் உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை. இந்த தீ விபத்து குறித்து தீயணைப்புத் துறையினர் மற்றும் தேனி நகர காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: காட்டிக்கொடுத்த குரல்வளை? - உடற்கூறாய்வு அறிக்கையால் சூடாகும் ஜெயக்குமார் வழக்கு! - Tirunelveli Jayakumar Case

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.