ETV Bharat / state

தமிழ்நாட்டில் 69.46 சதவீத வாக்குகள் பதிவு.. மறுவாக்குப்பதிவு உண்டா? - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

TN LS Polls turnout: தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக 69.46 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 20, 2024, 7:25 PM IST

Updated : Apr 20, 2024, 7:43 PM IST

சென்னை: இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள இறுதி வாக்குப்பதிவு நிலவரத்தின்படி, தமிழ்நாட்டில் 69.46 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. இதில், அதிகபட்சமாக தருமபுரி தொகுதியில் 81.48 சதவீதமும், மத்திய சென்னையில் 53.91 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளது.

மேலும், “தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், ஒரு சில இடங்களில் சிறுசிறு சலசலப்புகள் ஏற்பட்டது. சில இடங்களில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என அரசியல் கட்சியினர் கோரிக்கை வைத்திருந்தனர். இந்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் தேர்தல் சுமூகமாக நடைபெற்று முடிந்துள்ளது. அதனால் எந்த தொகுதியிலும் மறுவாக்குப் பதிவு நடைபெறாது” என தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகள் உட்பட நாடு முழுவதும் 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசம் என மொத்தம் 102 தொகுதிகளுக்கு நேற்று (ஏப்ரல்.19) மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்தது. தற்போது, நேற்று நிறைவடைந்த முதற்கட்ட நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் மொத்தம் 69.46 விழுக்காடு பதிவாகியுள்ளதாக இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளில் சுமார் 6 கோடியே 23 லட்சத்து 33 ஆயிரத்து 925 பேர் வாக்களிக்க மாநிலம் முழுவதும் 68 ஆயிரத்து 321 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. நேற்று 7 காலை விறுவிறுப்பாகத் துவங்கிய வாக்குப்பதிவில் முதல்முறை வாக்காளர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பலரும் உற்சாகமாக வந்து வாக்களித்துவிட்டுச் சென்றனர்.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் பிரமுகர்களும், திரை பிரபலங்களும் என அனைவரும் அவரவர் தொகுதிகளில் மக்களுடன் மக்களாக வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். மாலை 7 மணி நிலவரப்படி 72.09 சதவீதம் வாக்குகள் பதிவானதாகத் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் தற்போது இன்று (ஏப்ரல் 20) இரவு 07.08 மணி நிலவரப்படி, தமிழ்நாட்டில் பதிவான மொத்த வாக்குப்பதிவு 69.46 சதவீதம் என இந்தியத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ தகவலைத் தெரிவித்துள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 72.44 சதவீத வாக்குகள் பதிவான நிலையில், தற்போது 2024ஆம் ஆண்டு தேர்தலில் கிட்டத்தட்ட 3 சதவீதம் வாக்குகள் குறைவாகவே பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

வ.எண் தொகுதிவாக்குப்பதிவு %
1.திருவள்ளூர் 68.31
2.வட சென்னை 60.13
3.தென் சென்னை 54.27
4.மத்திய சென்னை 53.91
5.ஸ்ரீபெரும்புதூர் 60.21
6.காஞ்சிபுரம் 71.55
7.அரக்கோணம் 74.08
8.வேலூர் 73.42
9.கிருஷ்ணகிரி 71.31
10.தருமபுரி 81.48
11.திருவண்ணாமலை 73.88
12.ஆரணி 75.65
13.விழுப்புரம் 76.47
14.கள்ளக்குறிச்சி 79.25
15.சேலம் 78.13
16.நாமக்கல் 78.16
17.ஈரோடு 70.54
18.திருப்பூர் 70.58
19.நீலகிரி 70.93
20.கோயம்புத்தூர் 64.81
வ.எண் தொகுதி வாக்குப்பதிவு %
21.பொள்ளாச்சி 70.70
22.திண்டுக்கல் 70.99
23.கரூர் 78.61
24.திருச்சி 67.45
25.பெரம்பூர் 77.37
26.கடலூர் 72.28
27.சிதம்பரம் 75.32
28.மயிலாடுதுறை 70.06
29.நாகப்பட்டினம் 71.55
30.தஞ்சாவூர் 68.18
31.சிவகங்கை 63.94
32.மதுரை 61.92
33.தேனி 69.87
34.விருதுநகர் 70.17
35.ராமநாதபுரம் 68.18
36.தூத்துக்குடி 59.96
37.தென்காசி 67.55
38.திருநெல்வேலி 64.10
39.கன்னியாகுமரி 65.46

இதையும் படிங்க: உதயநிதியின் சனாதன தர்மம் கருத்து தவறானது.. அவர் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும்" - தெலங்கானா முதலமைச்சர்! - Revanth Reddy Santan Dharma Issue

Last Updated : Apr 20, 2024, 7:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.