ETV Bharat / state

"ஆளுநர் தேநீர் விருந்து புறக்கணிப்பை கூட சில கட்சிகள் பெருமையாக நினைக்கின்றன" - தமிழிசை சௌந்தரராஜன் காட்டம்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 28, 2024, 7:40 PM IST

ஆளுநர் தேநீர் விருந்துக்கு வரவில்லை என்று சொல்வதை கூட ஒரு சில கட்சிகள் பெருமையாக சொல்லி கொள்கின்றன என தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.

ஆளுநர் தேநீர் விருந்துக்கு வரவில்லை என்று சொல்வதை ஒரு சில கட்சிகள் பெருமையாக நினைக்கின்றன

மதுரை: தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் கலந்து கொண்டு உரையாற்றினார். விழாவில் பேசிய தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், “இங்கு நான் ஆளுநராக வந்திருக்கிறேன் என்று சொல்வதை விட, உங்களின் சகோதரியாக வந்திருக்கிறேன் என்பதில் பெருமை கொள்கிறேன்.

குடியரசு தின விழாவில் இரண்டு மாநிலங்களில் தேசிய கொடியை ஏற்றிய பெருமை உங்கள் சகோதரியாகிய எனக்குத் தான் உண்டு. காலையில் தெலுங்கானாவில் கொடியேற்றிவிட்டு, விமானத்தின் மூலம் புதுச்சேரி சென்று அங்கும் கொடியேற்றிவிட்டு, அதன்பின் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களை அழைத்து "அட் ஹோம்" நிகழ்ச்சியில் தேநீர் விருந்து கொடுக்க வேண்டும். அந்த ஆளுநர் தேநீர் விருந்துக்கு வரவில்லை என்று சொல்வதை கூட ஒரு சில கட்சிகள் பெருமையாக சொல்லி கொள்கின்றன.

தெலுங்கானாவில் கொடியேற்றிவிட்டு புதுவை வந்து அங்குள்ள முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு மாலை 4 மணிக்கு தேநீர் விருந்து கொடுத்துவிட்டு, மீண்டும் தெலுங்கானாவில் அமைச்சர்களுக்கு விருந்து கொடுத்தேன். அதனை தொடர்ந்து, இன்று காலை தெலுங்கானாவில் இரண்டு மாநாடுகளில் கலந்து கொண்டு, மாலை உங்களுக்கான இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன்.

ஆகவே, இரண்டு மாநிலத்தின் கொடியேற்றியது மட்டுமல்ல, இரண்டு மாநில முதலமைச்சர்களையும் அழைத்து தேநீர் விருந்து அளித்த முதல் ஆளுநர் என்ற பெருமையையும் உங்கள் சகோதரியாகிய எனக்கு மட்டும் தான் உள்ளது. ஏனென்றால், இதற்கு முன்பு மூன்று ஆண்டுகளாக தெலுங்கானா முதலமைச்சர் தேநீர் விருந்துக்கு வரவில்லை.

ஆனால், இந்த ஆண்டு அங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் இரண்டு மாநிலங்களிலும் தேநீர் விருந்து கொடுத்தேன். ஒரு அழைப்பு என்று வந்தால் அவர் எதிரியாக இருந்தாலும், வேறு கொள்கை உடையவர்களாக இருந்தாலும் மரியாதையுடன் கலந்து கொண்டு அவ்விருந்தை ஏற்றுகொள்ள வேண்டும்.

அந்த அன்பை பகிரும் குணம்தான் தமிழர் குணம், அதைதான் நமக்கு காமராஜரும் சொல்லி கொடுத்தார். காமராஜர் தன் கையால் தூக்கி ஆசீர்வதிக்கப்பட்ட குழந்தை நான். பொது வாழ்வில் பலத்தையும் கற்றுக் கொடுத்தவர் காமராஜர். தமிழ்நாட்டில் காமராஜர் தொழிற்பேட்டை, உயர்கல்வி நிறுவனம், அணைகள் ஆகியவற்றை நிறுவி பல சாதனைகளை செய்தவர்.

கருப்பு பணத்தை ஒழிக்க பண மதிப்பிழப்பு நடவடிக்கையை கொண்டு வந்தவர் பிரதமர் மோடி. காமராஜர் தற்போது இருந்திருந்தால் மோடியை பாராட்டியிருப்பார். என்னை தெலுங்கானா ஆளுநராக என்னை நியமித்த போது, 'அனுபவம் இல்லாத ஆளுநர்' எப்படி ஒரு புதிய மாநிலத்திற்கு ஆளுநராக செயல்படுவார் என்று விமர்சனங்கள் எழுந்தது.

அதனை தொடர்ந்து, பிரதமர் மோடி என்னை துணைநிலை ஆளுநராக நியமித்தார். அப்போதும் என்னை விமர்சித்தார்கள், ஒரு டாக்டருக்கு ஒரு குழந்தை மட்டுமல்ல, இரட்டை குழந்தை பிறந்தாலும் பாதுகாக்கத் தெரியும். அதுபோல, டாக்டருக்கு படித்து ஆளுநராகிய என்னால், இரண்டு மாநிலங்களையும் பார்த்து கொள்ள முடிந்தது. யாருக்கு வேண்டுமானாலும் ஓட்டு போடுங்கள், ஆனால் ஓட்டு போடுங்கள். நேற்று கூட சர்வாதிகாரத்திற்கு ஜனநாயகத்தில் இடமில்லை, அன்பிற்கு மட்டுமே இடம் உண்டு என்று நான் பேசினேன்” என கூறியுள்ளார்.

இதையும் படிங்க: மதுரையில் ஆயுதப்படை பெண் காவலர் தற்கொலை..! காவல்துறை விசாரணை..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.