ETV Bharat / state

சிகிச்சையில் பெண் யானை.. பாசப் போராட்டத்தில் குட்டி யானை.. மனதை உருக வைக்கும் காட்சிகள்! - Baby Elephant with mother - BABY ELEPHANT WITH MOTHER

Elephant Treatment: கோவை அருகே பெண் யானை ஒன்று உடல் நலம் சரியில்லாமல் இருந்த நிலையில், கால்நடை மருத்துவர்கள் இரண்டாவது நாளாக தொடர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

பெண் யானை மற்றும் குட்டி யானை
பெண் யானை மற்றும் குட்டி யானை (Credits: ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 31, 2024, 6:39 PM IST

Updated : May 31, 2024, 8:14 PM IST

கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் மருதமலை அடிவாரத்திற்கு உட்பட்ட பகுதியில் பெண் யானை ஒன்று உடல்நலக் குறைவால் மயங்க நிலையில் கிடத்ததை நேற்று (மே 30) வனத்துறையினர் கண்டறிந்துள்ளனர். அத்துடன், குட்டி யானையும் இருந்துள்ளது. இதனையடுத்து, வனத்துறையினர் கால்நடை மருத்துவர்களுக்கு தகவல் அளித்து, தொடர்ந்து பெண் யானைக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது.

பெண் யானை மற்றும் கால்நடை மருத்துவர் (Credits: ETV Bharat Tamilnadu)

நேற்று முழுவதும் குளுக்கோஸ், நீர்ச்சத்து நிறைந்த உணவுகள், மருந்துகள் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, இரண்டாவது நாளான இன்றும் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில், ஓரளவிற்கு உடல்நிலை தேறிய பெண் யானையை கிரேன் உதவியுடன் தூக்கி நிறுத்தினர். இதனையடுத்து, பெண் யானையின் மீது தண்ணீரை ஊற்றி ஆசுவாசப்படுத்தினர். இதற்கிடையே, குட்டி யானை தாய் யானையுடன் பால் குடித்தது.

இது குறித்து பேசிய கால்நடை மருத்துவர் சுகுமார், “உடல் நலக்குறைவால் இருந்த அந்த பெண் யானை 40 வயது மதிக்கத்தக்கது. அந்த பெண் யானையுடன் இருந்த குட்டி யானை பிறந்து மூன்று, நான்கு மாதங்கள் இருக்கும். பெண் யானை உடல் நலக்குறைவாக இருந்த நிலையில், நேற்று மட்டும் சுமார் 30 குளுக்கோஸ் பாட்டில்கள் ஏற்றப்பட்டது.

அதேபோல், இன்றைய தினமும் 30 குளுக்கோஸ் பாட்டில்கள் ஏற்பட்டதோடு, எதிர்ப்புச் சத்து மருந்துகளும் வழங்கப்பட்டது. நேற்றைய தினம் யானைக் கூட்டம் அந்த குட்டி யானையை அழைத்துச் சென்று விடும் என்று எண்ணிய நிலையில், அது நடைபெறாததால் இன்றும் குட்டி யானையை வைத்துக் கொண்டே அந்த பெண் யானைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

சிகிச்சையின் முடிவில் அந்த தாய் யானை குட்டி யானையை அழைத்துக் கொண்டு வனப்பகுதிக்குள் செல்ல வேண்டும் என்பதே எங்களுடைய எதிர்பார்ப்பு. ஆனால், தற்போது அந்த பெண் யானையின் தசைகள் அனைத்தும் தளர்ந்து காணப்படுவதால் அதனால் நடக்க முடியவில்லை.

தொடர்ந்து யானைக்கு இளநீர், தர்பூசணி, லாக்டோஜன் போன்றவை அளிக்கப்பட்டு வருகிறது. தெர்மல் கேமரா மூலம் சோதனை செய்ததில் யானைக்கு உட்புறத்தில் காயங்கள் எதுவும் இல்லை. ரத்தப் பரிசோதனை செய்ததில், அதற்கு கல்லீரல் பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டுள்ளது" என்றார்.

பின்னர், இப்பகுதிகளில் அதிக அளவு பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பதாகவும், அதனை விலங்குகள் உட்கொண்டு வருவதாகவும் புகார்கள் வருகின்றன என்ற கேள்விக்கு, "மாடுகளுக்கு பிளாஸ்டிங் பாதிப்புகளை ஏற்படுத்தும். யானையைப் பொறுத்தவரை, எதை உட்கொண்டாலும் 55 சதவிகிதத்திற்கு மேல் ஜீரணமாகி சுமார் 40 சதவீதம் வெளியேறும். பிளாஸ்டிக் உட்கொண்டாலும் அது சாணம் வழியாக வெளியேறிவிடும்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: தேர்தல் கருத்து கணிப்பு முடிவு என்றால் என்ன? அதனை எவ்வாறு அறிவது.. முழு விவரம் உள்ளே - Lok Sabha Election Exit Polls 2024

Last Updated : May 31, 2024, 8:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.