ETV Bharat / state

கோவையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தற்கொலை.. போலீசார் தீவிர விசாரணை!

Coimbatore family suicide: கோவையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 24, 2024, 12:41 PM IST

கோயம்புத்தூர்: கோவை கவுண்டம்பாளையம் டி.வி.எஸ். நகர் அடுத்த ஜவஹர் நகரைச் சேர்ந்தவர் கணேசன் - விமலா தம்பதி. இவர்களது மகள் தியா காயத்ரி (25). ஐடி ஊழியரான இவருக்கும், கோவை வடவள்ளி பகுதியைச் சேர்ந்த ஐ.டி ஊழியரான தீட்சித் என்பவருக்கும், கடந்த ஆண்டு நவம்பர் 3ஆம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணமானதும் இருவரும் பெங்களூருவில் தங்கி பணியாற்றி வந்துள்ளனர்.

ஆனால், திருமணமான ஒரு மாதத்திலேயே, கடந்த டிசம்பர் மாதம் காயத்ரிக்கும், அவருடைய கணவர் தீட்சித்துக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, காயத்ரி தனது பெற்றோர் வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் மூவரும் மன உளைச்சலில் இருந்துள்ளனர். இந்த நிலையில், கணேசன், விமலா, மகள் தியா காயத்ரி ஆகியோர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

தற்கொலை தவிர்
தற்கொலை தவிர்

இவ்வாறு தற்கொலை செய்யும் முன்பு, கணேசன் கோவையில் உள்ள தம்பியை தொடர்புகொண்டு, மகளின் நிலை குறித்து மிகுந்த வேதனையுடன் தெரிவித்து உள்ளதாகத் தெரிகிறது. அதன்பிறகு அவர் தொடர்புகொள்ளவில்லை என்பதால் சந்தேகம் அடைந்த கணேசனின் தம்பி, அண்ணனின் செல்போனுக்கு பல முறை அழைத்தும் அவர் எடுக்காததால், நேற்று (பிப்.23) இரவு 8 மணியளவில் வீட்டிற்கு வந்துள்ளார்.

கதவு உள்பக்கமாக பூட்டிக் கிடந்த நிலையில், சந்தேகம் அடைந்து, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே பார்த்தபோது, வீட்டிற்குள் கணேசன், விமலா, காயத்ரி ஆகியோர் சடலமாக கிடந்துள்ளனர். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், இது குறித்து உடனே கவுண்டம்பாளையம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளார். பின்னர், அங்கு வந்த காவல் துறையினர், 3 பேரின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும், காவல் துறையினரின் முதற்கட்ட விசாரணையில், மகள் கணவரை விட்டு பிரிந்து வந்ததிலிருந்து கடந்த ஒரு மாத காலமாக மூன்று பேரும் மன உளைச்சலில் இருந்துள்ளதும், இதன் காரணமாக இரண்டு நாட்களுக்கு முன்னர் மூன்று பேரும் சேர்ந்து தற்கொலை செய்ய முடிவு செய்ததும் தெரிய வந்துள்ளது. மேலும், இது குறித்து தியா காயத்ரியின் கணவரிடம் விசாரணை செய்ய காவல் துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

இதையும் படிங்க: கந்து வட்டி கொடுமை; திருவாரூரில் பியூட்டி பார்லர் உரிமையாளர் தற்கொலை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.