ETV Bharat / state

பழனி உழவர் சந்தையில் கடைகளை ஒதுக்குவதில் முறைகேடு என குற்றச்சாட்டு; அதிகாரிகளுடன் விவசாயிகள் வாக்குவாதம்! - palani Uzhavar Santhai issue - PALANI UZHAVAR SANTHAI ISSUE

palani Uzhavar Santhai issue: திண்டுக்கல் மாவட்டம் பழனி உழவர் சந்தையில் அதிகாரிகள் கடைகளை முறைகேடாக வியாபாரிகளுக்கு ஒதுக்குவதாக கூறி, அலுவலருடன் விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வாக்குவாதத்தில் ஈடுபட்ட விவசாயிகள்
வாக்குவாதத்தில் ஈடுபட்ட விவசாயிகள் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 22, 2024, 3:32 PM IST

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனியில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகே உழவர் சந்தை உள்ளது. தமிழகத்திலேயே சிறப்பாக காய்கறிகள் விற்பனையாகும் உழவர் சந்தையில் இதுவும் ஒன்றாகும். இங்கு சுமார் 100 கடைகள் உள்ளன. பல கிராமங்களில் இருந்து ஏராளமான விவசாயிகள் தாங்கள் விளைவித்த காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.

பழனி உழவர் சந்தை (Credits - ETV Bharat Tamil Nadu)

இது மட்டுமின்றி கொடைக்கானல் மலைப்பகுதியில் விளைவிக்கப்படும் காய்கறிகளும் பழனி உழவர் சந்தைக்கு கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகின்றன. இங்கு தினந்தோறும் 15 முதல் 20 டன் வரை காய்கறிகள் விற்பனையாகிறது. இங்கு வரும் விவசாயிகளுக்கு அன்றாடம் கடைகள் குழுக்கள் முறையில் ஒதுக்கப்படுகிறது. உழவர் சந்தையின் வேளாண் அலுவலர், உதவி வேளாண் அலுவலர் ஆகியோர் வெளியூரை சேர்ந்த பெண்கள் என்பதால் சரிவர வேலைக்கு வருவதில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்நிலையில் சமீப காலமாக கடைகளை அதிகாரிகள் வியாபாரிகளுக்கு ஒதுக்குவதாக புகார் எழுந்த நிலையில், இன்று அதிகாலையில் வந்த விவசாயிகள், தாமாகவே கடைகளை வைத்துக் கொண்டனர். பின்னர் வந்த விவசாயிகளுக்கு கடைகள் இல்லாமல் போனதால் அலுவலர் முரளி உடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அதிகாலையில் உழவர் சந்தையில் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் இரு விவசாயிகளுக்கு ஒரு கடை என பேசப்பட்டு விரைவில் பிரச்சினை சீர் செய்யப்படும் என தெரிவித்த பின் விவசாயிகள் கலைந்து சென்றனர். இது குறித்து விவசாயி ஆனந்தன் கூறுகையில், “விவசாயிகளுக்காக அமைக்கப்பட்டது தான் உழவர் சந்தை. ஆனால் தற்போது விவசாயி என்ற போர்வையில் வியாபாரிகள் கடை அமைத்து விடுகின்றனர். இதனால் விவசாயிகளுக்கு கடைகள் கிடைப்பதில்லை. விளைவித்த பொருட்களை விற்பனை செய்ய முடியவில்லை.

விவசாயிகள் காய்கறிகளை காலையில் எடுத்தும் வரும் நிலையில், வியாபாரிகள் அதற்கு முன்தினம் இரவே காய்கறிகளை எடுத்து வந்து கடைகளை பிடித்து கொள்கின்றனர். இதை அதிகாரிகளிடம் கூறினால் எதாவது ஒரு கடையில் விற்பனை செய்து கொள்ளுங்கள் என்கின்றனர். இரு பெண்கள் அதிகாரிகளாக இருக்கின்றனர். ஒரு பெண் அதிகாரி காலை 6:30 மணிக்கு வந்து 7:30 மணிக்கு கிளம்பி சென்றுவிடுகிறார். அதிகாரிகள் அலுவலகத்தை விட்டு வெளியே வருவது கிடையாது” என்று கூறினார்.

முன்னாள் ராணுவ வீரரும் விவசாயியுமான முருகேசன் கூறுகையில், “நான் கடந்த 3 ஆண்டுகளாக உழவர் சந்தையில் விற்பனை செய்து வருகிறேன். இந்த 3 ஆண்டுகளில் அதிகாரிகள் ஒருமுறை கூட தோட்டத்தை வந்து பார்த்தது கிடையாது. இரண்டு மாதத்திற்கு ஒருமுறை அடங்கல், சிட்டா எல்லாம் வாங்குகின்றனர். ஆனால் அதை ஆய்வு செய்வது கிடையாது. யாரும் அதைப்பற்றி பரிசீலனை செய்வது கிடையாது. இங்கு வியாபாரிகளின் அட்டகாசம் சற்று அதிகமாக உள்ளது.

40 கடைகள் மட்டும் தான் விவசாயிகளுக்கு தருகின்றனர். மீதமுள்ள கடைகளை வியாபாரிகளுக்கு கொடுத்து விடுகின்றனர். 100 விவசாயிகள் வருகிறோம். எங்களுக்கு வெறும் 40 கடைகளை மட்டும் ஒதுக்குவது சிரமமாக உள்ளது. அதிகாரிகள் இதைப்பற்றி கண்டுகொள்வதே இல்லை. ஆகவே இப்பிரச்னை தொடர்பாக உயர் அதிகாரிகள் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று முருகேசன் கூறினார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

வாட்ஸ் அப் சேனலில் இணைய
வாட்ஸ் அப் சேனலில் இணைய (Credits - ETV Bharat Tamil Nadu)

இதையும் படிங்க: “திமுக அரசு பாராமுகமாக உள்ளது.." - மாஞ்சோலை விவகாரத்தில் மீட்புக்குழு குற்றச்சாட்டு! - TN manjolai issue

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.