ETV Bharat / state

அந்தியோதயா ரயிலில் பயணிகளிடம் டிக்கெட் பரிசோதனை செய்த போலி டி.டி.இ. சிக்கியது எப்படி? - antyodaya super fast express

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 18, 2024, 5:25 PM IST

Antyodaya Super Fast Express: தாம்பரம் - நாகர்கோவில் அந்தியோதயா விரைவு ரயிலில் பயணிகளிடம் டிக்கெட் பரிசோதனை செய்த போலி டிக்கெட் பரிசோதகர் பிடிபட்டார். பிடிபட்ட அவரிடம் மதுரை ரயில்வே பாதுகாப்புப் படையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ரயில் கோப்புப்படம், பிடிபட்ட நபர்
ரயில் கோப்புப்படம், பிடிபட்ட நபர் (Credits - ETV Bharat Tamil Nadu)

மதுரை: தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து அந்தியோதயா விரைவு ரயில் (20691) இரவு 11 மணி அளவில் புறப்பட்டு செங்கல்பட்டு, விழுப்புரம், திருப்பாதிரிபுலியூர், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர் வழியாக மதியம் 12.45க்கு நாகர்கோவில் வந்தடையும்.

இந்நிலையில் அந்தியோதியா விரைவு ரயிலானது வழக்கம்போல் நேற்றிரவு 11 மணியளவில் தாம்பரத்திலிருந்து புறப்பட்டு இன்று (ஜூன் 18) காலை 6:10 மணியளவில் திருச்சி வந்தடைந்தது. அப்போது திருச்சியில் டிக்கெட் பரிசோதகர் உடையில் ஏறிய நபர், பயணிகளிடம் டிக்கெட்டை வாங்கி பரிசோதனை செய்துள்ளார். அதே ரயிலில், மதுரை கோட்டத்தின் தலைமை பயணச்சீட்டு ஆய்வாளர் சரவணசெல்வி என்பவரும் பயணம் செய்தார்.

அப்போது சரவணசெல்வி, டிக்கெட் பரிசோதனையில் ஈடுபட்ட நபரிடம் நீங்கள் எந்த ரயில்வே கோட்டத்தில் பணிபுரிகிறீர்கள்? உள்ளிட்ட விவரங்களைக் கேட்டபோது, மதுரையில் பணிபுரிவதாக அந்த நபர் கூறியிருக்கிறார். நானும் மதுரையில் தான் பணிபுரிகிறேன். உங்களைப் பார்த்ததில்லை என்று அவரது அடையாள அட்டைகளை வாங்கி சோதனை செய்ததில், அவர் வைத்திருந்தது போலி அடையாள அட்டை என்பதைக் கண்டறிந்தார்.

இதனையடுத்து, அந்தியோதியா ரயில் மதுரை ரயில் நிலையத்தை அடைந்தவுடன் ரயில்வே பாதுகாப்பு படையினரிடம் போலி டிக்கெட் பரிசோதகரை ஒப்படைத்தார். இதனைத்தொடர்ந்து அவரை கைது செய்து விசாரணை நடத்தியபோது, அந்த போலி டிக்கெட் பரிசோதகர் கேரளா மாநிலம், பாலக்காடு பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பது தெரிய வந்தது. தொடர்ந்து அவரிடம் எதற்காக இப்படி செய்தார்? என்பதை ரயில்வே பாதுகாப்புப் படையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: ஆம்னி பேருந்துகளில் வழக்கம் போல முன்பதிவு செய்யலாமா..? - பயணிகளுக்கு முக்கிய தகவல்! - omni bus issue

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.