ETV Bharat / state

"திமுக கூட்டணி உடைய அதிக வாய்ப்பு" - தமிழிசை சௌந்தரராஜன் பேச்சு!

திமுக கூட்டணியில் உள்ளவர்கள் வெளியேறுவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது எனவும், மக்களிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயற்கையான வரவேற்பை தான் பெற்று வருகிறார் என முன்னாள் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், முன்னாள் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், முன்னாள் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 9, 2024, 6:03 PM IST

சென்னை : சென்னை மயிலாப்பூரில் தனியார் அறக்கட்டளையின் 35வது ஆண்டு விழாவில், முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை செளந்தரராஜன், "எங்கள் கூட்டணியை பலம் பொருத்திய கூட்டணியாக மாற்றி 2026ம் ஆண்டு திமுக இல்லாத ஆட்சியாக உருவாக்குவோம் என உறுதி செய்கிறோம். மாற்றத்தை மக்கள் விரும்புகிறார்கள். மருத்துவத் துறையாக இருக்கட்டும், பள்ளிக் கல்வித் துறையாக இருக்கட்டும் பல வேலைகள் முடிவுராமல் உள்ளது.

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

மக்களிடத்தில் வரவேற்பு அதிகமாக உள்ளது என முதலமைச்சர் கூறி வருகிறார். ஆனால் செயற்கையான வரவேற்பை முதலமைச்சர் பெற்று வருகிறார். திமுக கூட்டணியில் உள்ளவர்கள் வெளியேறுவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. காங்கிரஸ் மதச்சார்பற்ற கட்சி என்ற முகத்திரை கிழிந்து இருக்கிறது. அகில இந்திய அளவில் இந்தியா கூட்டணி உறுதியாக இல்லை" என தெரிவித்தார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், "எம்மதமும் சம்மதம் என்கிற ரீதியில் அனைத்து தரப்பு மக்களுடைய எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில், அவர்களுடைய வாழ்வாதாரம் உயரும் வகையில், சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை வளமுடன் இருக்க சிறப்பான திட்டங்களை மத்திய அரசு கொடுத்துக் கொண்டிருக்கிறது.

இதையும் படிங்க : “2026 தேர்தலில் நிச்சயம் திருமா எங்கள் கூட்டணியில்தான் இருப்பார்”- அமைச்சர் ரகுபதி பேட்டி

இந்த நிலையில் தமிழகம் போன்ற ஒரு சில அரசுகள் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக மத்திய அரசினுடைய திட்டங்களை தவிர்ப்பது மக்களுடைய எண்ணங்களை அரசு புறக்கணிப்பதாக அர்த்தம். ஏழை, எளிய மக்களுடைய வளர்ச்சியை அவர்கள் தடுப்பதாக அர்த்தம். எனவே, மத்திய அரசினுடைய அனைத்து தரப்பு மக்களுக்கான திட்டங்களை தமிழக அரசு ஊக்குவிக்க வேண்டும். அதை முறையாக சரியாக செயல்படுத்த வேண்டும்.

அரசியலுக்கு அப்பாற்பட்டு வளமான தமிழகம், வலிமையான பாரதம் தேவை. மத்திய அரசை பொருத்தவரை மத நல்லிணக்க எடுத்துக்காட்டான அரசாக இருக்கிறது. அனைத்து தரப்பு மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கிற திட்டங்களைக் கொடுக்கும் போது அதை செயல்படுத்துவது மாநில அரசினுடைய கடமை. அதை தமிழக அரசு சரியாக செய்ய வேண்டும்.

தமிழகத்திலே எந்தெந்த கட்சியோடு எந்தெந்த கட்சிகள் கூட்டணியில் இருக்கிறது என்பதை பாருங்கள். எந்த கட்சி கூட்டணிக்கு தலைமை வகிக்கிறதோ அந்த கட்சி A Team-ஆக இருக்கிறது. அந்த கட்சியோடு கூட்டணியாக இருக்கிற கட்சிகள் B team-ஆக இருக்கிறது.

இந்த கூட்டணியில் சேராத கட்சிகள் C team-ஆக இருக்கிறது. சில நேரங்களில் சில கட்சிகள் கூட்டணியில் இருந்தாலும் கூட C team-ஆக செயல்பட்டு வருகிறது. 2026ம் ஆண்டு தேர்தலை பொருத்தவரையில், ஒத்த கருத்துடைய கட்சிகள் ஓர் அணியில் நின்று ஆட்சி அமைக்கும் என்ற நல்ல நிலை ஏற்படும்" என தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.