ETV Bharat / state

இன்பநிதிக்கு பாசறை வைத்தவருக்கு மீண்டும் பொறுப்பு..! கட்சி தாவினால் ப்ரோமோஷனா? குமுறும் உ.பிக்கள்..! - inbanidhi pasarai

திமுகவில் உண்மை விசுவாசிகளுக்கு மதிப்பு இல்லை என்றும் கட்சி மாறி மாறி வருபவர்களுக்கு தான் பொறுப்பும் பதவியும் கிடைக்கிறது எனவும் புதுக்கோட்டை மாவட்ட திமுகவைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர் தனது முகநூல் பக்கத்தில் ஆதங்கத்துடன் பதிவிட்டுள்ளார்.

திமுக திருமுருகன்
திமுக திருமுருகன் (Credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 12, 2024, 2:56 PM IST

புதுக்கோட்டை: உழைக்காமல் நாளுக்கட்சி போனவருக்கு வலிய வந்து கட்சி இணைத்துக்கொள்வதாகவும், உழைத்தவர்களை கட்சியை விட்டு நீக்குவதாகவும் திமுக நிர்வாகி ஒருவர் ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருப்பது பேசுபொருளாகியுள்ளது. இதுகுறித்து திமுக நிர்வாகி பதிவிட்டிற்கும் முகநூல் பதிவின் பின்னால் உள்ள காரணம் என்ன என்பதை பற்றி பார்க்கலாம்...

இன்பநிதி பாசறை: புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த ஆண்டு (2023) செப்டம்பர் மாத தொடக்கத்தில் "விரைவில் உதயமாகிறது இன்பநிதி பாசறை" என்கின்ற சுவரொட்டி நகர் முழுவதும் அச்சடித்து ஒட்டப்பட்டிருந்தது. மேலும் "எதிர்காலமே" என்ற தலைப்பில் "இன்பநிதி பாசறை" என்ற பெயரில் செப்டம்பர் 24ஆம் தேதி மக்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் எனவும், ''மண்ணைப் பிளக்காமல் விதைகள் முளைப்பதில்லை போராட்டக்களமின்றி வெற்றி கிடைப்பதில்லை'' என்ற வாசகமும் போஸ்டரில் அச்சடித்து, அமைச்சர் உதயநிதியின் மகன் இன்பநிதி படத்தை அச்சடித்து ஒட்டப்பட்டிருந்தது.

கட்சி தலைமை நடவடிக்கை: இது திமுக நிர்வாகிகளிடையே பரபரப்பையும், குழப்பத்தையும் ஏற்படுத்தி இருந்தது. இதனை அடுத்து இந்த சுவரொட்டியை தயார் செய்த புதுக்கோட்டை வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த மாவட்ட கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர் வடவாளம் மணிமாறன், மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர் மு.க. திருமுருகன் ஆகியோர் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுவதாக கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்திருந்தார்.

குமுறிய திருமுருகன்: அதன்படி, தி.மு.க நிர்வாகிகள் இருவரும், கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டிருந்தனர். இது குறித்து (அப்போது) திருமுருகனிடம் விளக்கம் கேட்டபோது, "தி.மு.க-வில் வடக்கு மாவட்டத்தில் கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கும் மேலாக உழைக்கிறேன். ஆனால், தற்போது வடக்கு மாவட்டத்தில் அணிகளின் பொறுப்பாளர்கள் விஷயத்தில் நேற்று கட்சியில் சேர்ந்தவர்களுக்கு அமைப்பாளர் பொறுப்புகள் கொடுக்கப்படுகிறது. திட்டமிட்டு எங்களைப் புறக்கணித்துள்ளனர்.

சமீபத்தில் புதுக்கோட்டைக்கு உதயநிதி ஸ்டாலின் வந்தபோது, அவரை பக்கத்தில் நெருங்ககூட விடவில்லை. தலைவர் கருணாநிதியின் பேரன் அரசியலுக்கு வரும்போது, தலைவர் ஸ்டாலினின் பேரன் ஏன் அரசியலுக்கு வரக் கூடாது. நாளை அவரும் அரசியலுக்கு வர அதிக வாய்ப்புள்ளது. எங்களது எதிர்கால சந்ததிக்காக அவர்களும் எங்களைப் போன்று பாதிப்படைந்துவிடக் கூடாது என்பதற்காகவே, இன்பநிதி எங்கள் கோரிக்கையை ஏற்பார் என்பதற்காக `இன்பநிதி பாசறை' ஆரம்பித்திருக்கிறோம்.

இதில் என்ன தவறு?: நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுவதாகத் தானே நாங்கள் அறிவித்து நோட்டீஸ் ஒட்டினோம். இதில், என்ன தவறு நடந்திருக்கிறது. நேற்று நோட்டீஸ் ஒட்டினோம். இன்று நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள். இது போன்ற நடவடிக்கையை அனைத்து விஷயங்களுக்கும் எடுக்க வேண்டும்" என்றார்.

அதிமுகவில் இணைப்பு: இவர்களில் மணிமாறன் அமைதி காக்க, திருமுருகன் அதிருப்தியில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் முன்னிலையில் கடந்த ஜனவரி மாதம் அதிமுகவில் இணைந்தார். அங்கு அவருக்கு மாவட்ட இளைஞரணியில் பொறுப்பும் வழங்கப்பட்டது.

நடவடிக்கை ரத்து: இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடானா முரசொலியில் ஒழுங்கு நடவடிக்கை ரத்து, "புதுக்கோட்டை வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த க.செ.மணிமாறன், மு.க.திருமுருகன் ஆகியோர் தங்களது செயலுக்கு வருத்தம் தெரிவித்து மீண்டும் கழக பணியாற்றிட அனுமதி அளிக்குமாறு, கழக தலைவரிடம் வைத்த கோரிக்கையை ஏற்று அவர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்பட்டு இன்று முதல் கழக உறுப்பினராக செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்" என தலைமை கழகம் சார்பில் அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில், திருமுருகன் அதிமுகவில் இணைந்த நிலையில் எப்போது கட்சியில் இருந்து வெளியேறினார்? 7 மாதங்களுக்குள் திமுகவிலிருந்து அதிமுகவுக்கும், அங்கிருந்து மீண்டும் திமுகவுக்கும் மாறியது எப்படி? ஒழுங்கு நடவடிக்கை என்பது, கட்சி கட்டுப்பாடுகளை மீறும் போது எடுக்கப்படுவது தானே, கட்சி தலைமை கண்டிப்புடன் இருந்தால் தானே கட்சியினருக்கும் பயம் இருக்கும் என்ற கேள்வியை திமுகவின் மூத்த நிர்வாகிகள் எழுப்புகின்றனர்.

மேலும், திருமுருகன் அதிமுகவில் இணைந்தது மாவட்ட செயலாளர் செல்லபாண்டியனுக்கு தெரியாமல் போய்விட்டதா? அப்படி இருக்கும்போது எப்படி ஒழுங்கு நடவடிக்கை ரத்தானது? அவர் எப்போது வருத்தம் தெரிவித்து தலைமைக்கு கடிதம் அனுப்பினார். தற்போது அதிமுகவில் பொறுப்பில் உள்ளவருக்கு எப்படி மீண்டும் திமுகவில் இடம் கிடைத்தது என அடுத்தடுத்த கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது.

இது ஒருபுறம் இருக்க திருமுருகன் தரப்பு தொடர்பாக எந்த விளக்கமும் கொடுக்காமல் அமைதியாக இருக்கிறது. அவர் அதிமுகவில் இருக்கிறாரா அல்லது திமுகவில் இருக்கிறாரா என்ற குழப்பம் தற்போது வரை நீடிக்கிறது. இது தொடர்பாக திருமுருகன் மற்றும் மணிமாறன் தரப்பு விளக்கத்தைப் பெற ஈடிவி பாரத் முயன்ற போது, அவர்கள் பதிலளிக்கவில்லை. அவர்களின் விளக்கத்தையும் வெளியிட ஈடிவி பாரத் தயாராக உள்ளது.

இதையும் படிங்க: மு.க.அழகிரி மகன் துரை தயாநிதிக்கு கொலை மிரட்டல்! போலீசார் கூறுவது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.