ETV Bharat / state

ஒரே நிறுவனத்தின் கீழான அனைத்து பள்ளிகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல்! - TIRUNELVELI BOMB THREAT TO SCHOOL - TIRUNELVELI BOMB THREAT TO SCHOOL

BOMB THREAT TO SCHOOL: திருநெல்வேலி மாவட்டம் ரகுமத் நகரில் உள்ள தனியார்ப் பள்ளிக்கு போலியான மின்னஞ்சல் கடிதம் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

ஈமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்(கோப்புப்படம்)
ஈமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் (கோப்புப்படம்) (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 29, 2024, 3:30 PM IST

திருநெல்வேலி: ஈரோட்டை தலைமையிடமாகக் கொண்டு திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை ரகுமத் நகரில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்நிலையில், இன்று அதிகாலை அந்த பள்ளியின் தலைவருக்கு மின்னஞ்சல் மூலம் தமிழகத்தில் இருக்கும் 11 கிளை பள்ளிகளிலும் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் கடிதம் அனுப்பப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, அப்பள்ளி நிர்வாகம் காவல்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்த நிலையில், அந்த பள்ளியின் ஈரோடு தலைமையகம் மற்றும் அதன் கிளை பள்ளிகளில் காவல்துறையினர் மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், நெல்லை கிளை தனியார் பள்ளியில் மாநகர காவல் துறை மற்றும் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீசார் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு பள்ளி வளாகத்தில் சோதனை நடத்தினர். அதனால் இன்று பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

சோதனையின் முடிவில், வெடிகுண்டு எதுவும் வைத்தாக தெரியவராத நிலையில், காவல்துறை மற்றும் சைபர் குற்றப்பிரிவு போலீசார் யார் இந்த போலியான மின்னஞ்சல் கடிதத்தை அனுப்பியது என்றும், வேறு ஏதாவது நோக்கத்துடன் பள்ளிக்கு இந்த வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதா? என தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு தனியார் பள்ளிக்கு மர்ம நபர் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: சென்னை கார் பந்தயத்திற்கு தடைகோரிய வழக்கில் உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.