ETV Bharat / state

ஈரோட்டில் ஆணவ கொலை முயற்சியால் 15 வயது சிறுமி உயிரிழந்த சோகம்; கணவன் மனைவி பிடிபட்டது எப்படி? - ஈரோடு ஆணவக் கொலை

Erode Honor Killing: மகள் காதல் திருமணம் செய்ததால் ஆத்திரமடைந்த மாமனாரின் கொலை முயற்சியில், மருமகனின் தங்கை உயிரிழந்த சம்பவத்தில், தலைமறைவாக இருந்த கணவன் மனைவியை போலீசார் கைது செய்தனர்.

Erode police arrest husband wife who honor killing issue
ஈரோட்டில் 10ம் வகுப்பு பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 8, 2024, 9:46 AM IST

ஈரோட்டில் 10ம் வகுப்பு பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம்

ஈரோடு: சத்தியமங்கலம் அருகே உள்ள எரங்காட்டூர் குருவாயூரப்பன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுபாஷ்(24). இவர் 2023 அக்டோபர் மாதம் சத்தியமங்கலம் காந்தி நகரைச் சேர்ந்த மஞ்சு என்ற பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்டுள்ளார். வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்த மஞ்சுவின் பெற்றோர் சந்திரன் மற்றும் சித்ரா, அடிக்கடி மிரட்டல் விடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் (மார்ச் 6) சுபாஷ் 10ஆம் வகுப்பு படிக்கும் அவரது தங்கையைப் பள்ளியில் விடுவதற்காக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, சுபாஷின் மாமனார் பிக்கப் வேனை ஓட்டி வந்து, அவர்களது வாகனத்தின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளார். இதில் சுபாஷுக்கு பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், அவரது தங்கைக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

இதனைத்தொடர்ந்து, ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் உத்தரவின் பேரில் சத்தியமங்கலம் டிஎஸ்பி சரவணன் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தலைமறைவாக இருந்த கணவன் மனைவியான சந்திரன் மற்றும் சித்ராவை போலீசார் தீவிரமாக வலைவீசித் தேடிவந்தனர். இந்த நிலையில், இவ்விருவரும் நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகே உள்ள புதுமந்து பகுதியில் பதுங்கி இருந்தது தெரியவந்தது.

இதனடிப்படையில், ஊட்டி போலீசாரின் உதவியுடன் இருவரையும் பிடித்த சத்தியமங்கலம் போலீசார், ஈரோட்டிற்கு இருவரையும் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், நேற்று சிறுமியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் வீட்டிற்குக் கொண்டு வரப்பட்ட உடலைப் பார்த்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுத காட்சி அப்பகுதி முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: கணவருக்காக தொடங்கிய ஆட்டோ பயணம்.. மகளிர் தினத்தில் மிளிரும் தென்காசி மர்ஜான்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.