ETV Bharat / state

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்! - Bomb threat to Anna university - BOMB THREAT TO ANNA UNIVERSITY

Bomb threat to Anna university: சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரிக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததைத் தொடர்ந்து, வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர். சோதனை முடியில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரிய வந்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழகம்
அண்ணா பல்கலைக்கழகம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 4, 2024, 1:56 PM IST

சென்னை: சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பொறியியல் கல்லூரியின் மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் ஒன்று வந்துள்ளது. அதில் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. இது குறித்து கோட்டூர்புரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அதன் பேரில் மோப்ப நாய், வெடிகுண்டு செயல் இழக்கச் செய்யும் நிபுணர்கள் உதவியுடன் போலீசார் கல்லூரி வளாகம் முழுவதும் சோதனை நடத்தினர்.

சோதனையின் முடிவில், வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரிய வந்தது. இதனை அடுத்து, மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சமீப காலமாக கல்வி நிறுவனங்கள், விமான நிலையங்கள் உள்ளிட்டவற்றிற்கு வெடிகுண்டு மிரட்டல் தொடர்ந்து வந்து கொண்டே இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இன்று பொறியியல் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து கல்வி நிலையங்களைக் குறிவைத்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுவதைத் தடுக்க காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களின் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Click here ETV Bharat Tamil WhatsApp channel Click here
Click here ETV Bharat Tamil WhatsApp channel Click here (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: திருவண்ணாமலை அரசு கல்லூரி கழிப்பறையில் படையெடுத்த பாம்புகள்.. முதல்வர் கூறுவது என்ன? - Snakes in Govt College Toilet

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.