ETV Bharat / state

நீலகிரியில் உடல் நலக்குறைவால் ஆண் யானை உயிரிழப்பு! - ELEPHANT DIED IN NILGIRIS - ELEPHANT DIED IN NILGIRIS

Elephant Died In Nilgiris: நீலகிரி மாவட்டம், சிங்காரா வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் ஆண் யானை ஒன்று இறந்து கிடந்தது. பின்னர், பிரேதப் பரிசோதனை முடிவில் உடல் பலவீனம் காரணமாக யானை இறந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Elephant Died In Nilgiris
நீலகிரியில் உடல் நலக்குறைவால் 8 வயது மதிக்கத்தக்க ஆண் யானை உயிரிழப்பு
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 9, 2024, 8:28 PM IST

நீலகிரி: நீலகிரி மாவட்டம், கூடலூர் அடுத்த முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி கோட்டம், சிங்காரா வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், வனவிலங்குகள் உணவு மற்றும் நீரின்றி தவித்து வருகின்றன.

இந்நிலையில், இன்று (ஏப்.9) சிங்காரா வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் ஆண் யானை ஒன்று இறந்து கிடந்தது. இதனையடுத்து, துணை இயக்குநர் மசினகுடி கோட்டம் முன்னிலையில், கால்நடை உதவி மருத்துவரால் பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

பிரேதப் பரிசோதனையின் முடிவில், யானைக்கு வயது சுமார் 8 இருக்கலாம் எனவும், யானையானது உடல் சத்துக் குறைபாடு மற்றும் உடல் பலவீனம் காரணமாக இறந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், யானையின் உள்ளுறுப்புகளில் ஒட்டுண்ணி புழுக்கள் அதிக அளவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

முன்னதாக, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக தனியார் தோட்டத்தில் ஒரு யானை மயங்கி இருந்த நிலையில், அதற்கு முதுமலை புலிகள் காப்பக மருத்துவக் குழு சிகிச்சை அளித்தது. சிகிச்சைக்குப் பின் அந்த யானை எழுந்து வனப்பகுதிக்குச் சென்றது. யானையைக் கண்காணிக்க குழு அமைக்கப்பட்டது. பின்னர், இந்த யானையானது கூட்டத்துடன் சேர்ந்து விட்டதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பேடிஎம் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி சுரிந்தர் சாவ்லா ராஜினாமா! என்ன காரணம்? - Paytm MD And CEO Resign

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.