ETV Bharat / state

ஈரோடு: கடம்பூரில் மின் வேலியில் சிக்கி யானை உயிரிழப்பு! - elephant died in kadambur

ஈரோடு கடம்பூர் மலைப்பகுதியில் மக்காச்சோள தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கி 40 வயதுள்ள யானை உயிரிழந்தது. இது தொடர்பாக வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உயிரிழந்த யானை
உயிரிழந்த யானை (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 7, 2024, 2:49 PM IST

ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. கடம்பூர் வனச்சரகத்துக்குட்பட்ட மலைக் கிராமங்களில் மானாவாரி விவசாயம் அதிகளவில் செய்யப்படுகிறது. ராகி, மக்காச்சோளம், மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்வதால் வனத்தில் இருந்து வரும் விலங்குகள் அவற்றை சேதப்படுத்துவதாக விவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

ஆண்டு முழுவதும் பயிர் செய்து வனவிலங்குகளால் சேதமடைவதால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதனால் யானையை கட்டுப்படுத்துவதற்கு சோலார் பேட்டரி மின்வேலி அமைத்துக்கொள்ள வனத்துறை அனுமதியளித்து உள்ளது. ஆனால் விவசாயிகள் சட்டவிரோதமாக மின்கம்பத்தில் இருந்து மின்சாரம் திருடி மின்வேலியில் பாய்ச்சுவதால் யானைகள் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

இதையும் படிங்க: கொடிகட்டிப் பறந்த பாலியல் தொழில்.. முற்றுப்புள்ளி வைத்த போலீசார் - ஏலகிரி மலையில் நடந்தது என்ன? - Sex Workers Arrested in Tirupattur

மின்சாரம் தாக்கி யானை இறப்பு: இந்த நிலையில், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் கடம்பூர் மலைப்பகுதி குரும்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர் தனது தோட்டத்தில் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளார். கதிர்கள் முற்றிய நிலையில் மக்காச்சோள பயிரை காட்டு பன்றிகள் தினந்தோறும் தோட்டத்துக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வந்துள்ளன.

இதனால் காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்த தோட்டத்தை சுற்றி மின்வேலி அமைத்து அதில் சட்டவிரோதமாக மின்சார இணைப்பு கொடுத்துள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் இன்று அதிகாலை குரும்பூர் வனத்தில் இருந்து வெளியேறிய காட்டு யானை, சுப்பிரமணியின் மக்காச்சோள காட்டுக்குள் புகுந்த போது மின்வேலியில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. அங்கு வந்த கடம்பூர் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று யானையின் உடலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

கால்நடை மருத்துவர் சதாசிவம் தலைமையிலான மருத்துவ குழுவினர் யானையின் உடலை உடற்கூராய்வு ஆய்வு செய்ய உள்ளனர். யானை உயிரிழந்த தொடர்பாக தோட்டத்து உரிமையாளர் சுப்பிரமணியை வனத்துறை வலைவீசி தேடி வருகின்றனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.