ETV Bharat / state

ரயில் மோதியதில் உடல் சிதறி உயிரிழந்த வயதான தம்பதியர்.. செங்கல்பட்டில் நடந்த சோகச் சம்பவம்..!

செங்கல்பட்டு, மறைமலை நகர் ரயில் நிலையம் அருகே ரயில் மோதியதில் உடல் சிதறி வயதான கணவன் மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Railway Police
தாம்பரம் ரயில்வே காவல் நிலையம் (Credits- ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 5, 2024, 5:27 PM IST

செங்கல்பட்டு: செங்கல்பட்டு, மறைமலை நகர் ரயில் நிலையம் அருகே ரயில் மோதியதில் உடல் சிதறி வயதான கணவன் மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் நின்னக்கரை பகுதியில் வசித்து வருபவர்கள் செந்தில் வேலன் (82) - பசும்பொன் (71) தம்பதி. இவர்கள் இருவரும் நேற்று (நவ.04) இரவு ராமேஸ்வரம் செல்வதற்காக செங்கல்பட்டு சென்று ரயிலை பிடிப்பதற்காக மறைமலைநகர் ரயில் நிலையம் சென்றனர்.

இந்த நிலையில், நேற்று (நவ.04) இரவு இருவரும் மறைமலைநகர் ரயில் நிலையத்தில் ரயில் பாதையை கடக்க முயன்றுள்ளனர். அப்போது அந்த பாதையில் வந்த ரயிலை அவர்கள் கவனிக்கவில்லை. அப்போது அதிவேகமாக வந்த பல்லவன் விரைவு ரயில், செந்தில் வேலன் (82) - பசும்பொன் (71) தம்பதி மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட முதியவர்கள் இருவரும் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து வழக்குப்பதிவு செய்துள்ள தாம்பரம் ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதையும் படிங்க: மீன் பிடிக்கச் செல்லும்போது தவறி விழுந்த மீனவர்.. தேடும் பணி தீவிரம்!

மேலும், முதியவர்களின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் முதிய தம்பதியின் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.