ETV Bharat / state

"முதல்வர் அழைத்ததால் தான் மக்கள் சென்றார்கள்; மரணங்களுக்கு அவரே முழு பொறுப்பு" - எடப்பாடி பழனிசாமி - EDAPPADI PALANISAMY SLAMS STALIN

சென்னை மெரினா விமானப் படை சாகச நிகழ்ச்சியின் போது நடந்த உயிர் இழப்புக்கு முதல்வர் ஸ்டாலினே முழு பொறுப்பேற்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி (credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 7, 2024, 5:38 PM IST

எடப்பாடி: சேலம் மாவட்டம், எடப்பாடி பயணியர் மாளிகையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், ''இந்திய விமானப்படையின் 92வது தூக்க நாள் விழாவில் நடைபெற்ற வான் சாகச நிகழ்ச்சியை காண வருமாறு மக்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பு விடுத்தார். அதன்படி, லட்சக்கணக்கான மக்கள் கூடினர். ஆனால் அரசு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்காத காரணத்தாலும், லட்சக்கணக்கானோர் மெரினா கடற்கரையில் கூடியதாலும் கூட்ட நெரிசலில் பல பேர் உயிரிழந்தனர்.

மக்கள் அடிப்படை வசதிகள் இல்லாமல் துன்பத்திற்கு ஆளானார்கள். நூற்றுக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வருவதாக செய்தி வாயிலாக தெரிகிறது. எவ்வளவு பேர் கூடுவார்கள் என்பதை உளவுத்துறை மூலம் தகவல் பெற்று, தக்க பாதுகாப்பு ஏற்பாடுகள், அடிப்படை வசதிகள் செய்திருந்தால் உயிர் சேதம் ஏற்பட்டிருக்காது. இது வெட்கக்கேடான விஷயம்.'' என்றார்.

மேலும், '' திமுக அமைச்சர் இதை அரசியல் ஆக்க வேண்டாம் என்று கூறுகிறார். முதலமைச்சர், அமைச்சர்கள் மட்டும் பாதுகாப்பான இடத்தில் அமர்ந்து சாகச நிகழ்ச்சி பார்த்தனர். அரசு என்றால் மக்களை பாதுகாக்க வேண்டும். இதற்கு முழு பொறுப்பை முதலமைச்சர் ஸ்டாலின் தான் ஏற்க வேண்டும். ஏனென்றால் அவர் தான் அழைப்பு விடுத்தார். இதேபோன்று பல்வேறு இடங்களில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியில் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடைபெற்ற இந்த பிரச்சனைக்கு தமிழக அரசை வன்மையாக கண்டிக்கிறோம்'' என கூறினார்.

இதையும் படிங்க: மெரினா மரணங்கள்: கனிமொழி சொன்ன அட்வைஸ்! மா.சு. கொடுத்த ரியாக்ஷன்!

தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, '' அதிமுக ஆட்சியில் இருந்தபோது நாட்டு மக்களை கடனாளியாக ஆக்கிவிட்டதாக ஸ்டாலின் கூறினார். இப்போது திமுகவின் 40 மாத ஆட்சியில் முதல் 3.5 லட்சம் கோடி கடன் வாங்கி உள்ளனர். என்ன பெரிய திட்டத்தை கொண்டு வந்தனர். உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தினார்கள். புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டதாக கூறினார்கள். இப்போது இந்தியாவில் உள்ள தொழில் அதிபர்களை அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்று அங்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடுவது ஏமாற்று வேலை. வெளிநாடு சிகிச்சை பெறுவதற்காக வெளிநாடு சென்றதாகவும் மக்கள் பேசிக் கொள்கின்றனர். 19 புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒரே வாரத்தில் போட்டிருக்கலாம்'' என்றார்.

சனாதனம் குறித்து உதயநிதி ஸ்டாலினுக்கும், பவன் கல்யாணுக்கும் ஏற்பட்டுள்ள கருத்து மோதல் குறித்தா கேள்விக்கு, ஆந்திர துணை முதலமைச்சரும், இங்கு உள்ள துணை முதலமைச்சரும் கருத்து சொல்லி இருக்கிறார்கள். கருத்து மோதல் தான் சென்று கொண்டிருக்கிறது'' என எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.